Thursday, April 12, 2012புதுடில்லி::தூக்கு தண்டனை கைதிகளால் அளிக்கப்பட்டு, கவர்னர்களின் பரிசீலனைக்காக நிலுவையில் உள்ள கருணை மனுக்கள் குறித்து, 48 மணி நேரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும். இல்லையெனில், சம்பந்தபட்ட மாநிலங்களின் உள்துறை செயலர்கள், நேரில் ஆஜராக வேண்டியிருக்கும்'' என, ஆந்திரா, மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட ஏழு மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.விவரம் என்ன?"ஜனாதிபதி மற்றும் கவர்னர்களின் பரிசீலனையில் உள்ள, தூக்கு தண்டனை கைதிகளின் கருணை மனுக்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கும், தமிழகம், ஆந்திரா, பஞ்சாப், ஒடிசா, மேற்கு வங்கம், அரியானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநில அரசுகளுக்கும், சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.இந்நிலையில், இது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபத்யாயா ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:அணுக முடியவில்லை : தூக்கு தண்டனை கைதிகளில், அரசியல் தொடர்பானவர்களின் கருணை மனுக்களை தவிர, மற்றவர்களின் கருணை மனுக்களை பற்றிய விவரங்களை, மீடியாக்கள் வெளியிடுவது இல்லை. பல்வேறு காரணங்களுக்காக, கோர்ட்டை அணுக முடியாமல், ஜனாதிபதி மற்றும் கவர்னரிடம் கருணை மனுக்களை பலர் அளித்துள்ளனர்.இவர்களை பற்றிய விஷயங்களை, இந்த கோர்ட் ஆய்வு செய்யும். ஏற்கனவே நாங்கள் உத்தரவிட்டிருந்தும், ஏழு மாநில அரசுகள், தங்கள் மாநில கவர்னர்களிடம் பரிசீலனைக்காக நிலுவையில் உள்ள கருணை மனுக்கள் பற்றிய விவரங்களை எங்களிடம் தாக்கல் செய்யவில்லை. 48 மணி நேரத்தில்எனவே, 48 மணி நேரத்துக்குள் இந்த விவரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில், சம்பந்தபட்ட மாநில அரசுகளின் உள்துறை செயலர்கள், கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டியிருக்கும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment