Thursday, April 12, 2012

பிரேம்குமார் - திமுத்து கடத்தலுடன் பாதுகாப்பு தரப்பினருக்கு தொடர்பில்லை - லக்ஷ்மன் யாப்பா!

Thursday, April 12, 2012
இலங்கை::பிரேம்குமார் குணரட்னம் மற்றும் திமுத்து ஆட்டிகல ஆகியோர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்துடன் பாதுகாப்பு தரப்பினருக்கு தொடர்பில்லை என பதில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பியின் திருகோணமலை மாவட்ட ஆயுதப்பிரிவுக்கு பொறுப்பாக இருந்த குணரட்னம் நொயேல் முதலிகே என்ற பெயரில் இலங்கைக்குள் வந்திருப்பதை, அவர்கள் பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவில் சரணடைந்த பின்னரே அரசாங்கம் அறிந்துக்கொண்டது எனவும் அமைச்சர் கூறியுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜே.வி.பி இரண்டாக பிளவுப்பட்ட பின்னர், குமார் குணரட்னம் என்பவர் ஜே.வி.பியில் இருந்தாரா என்பதை தான் கூட அறிந்திருக்கவில்லை என ஜே.வி.பியின் தலைவர் சோமவங்ச அமரசிங்க இதற்கு முன்னர் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். இதனால் அவரை கடத்திச் சென்றது. ஜே.வி.பியா அல்லது வேறு ஒரு குழுவா என்பதை அரசாங்கத்தினால் இன்னும் கூற முடியாதுள்ளது எனவும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment