யுத்தத்தின் போது மக்கள் இறப்பது சகஜம் என ஆப்கான் யுத்தம் தொடர்பில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர், ஆனால் இலங்கையில் உறுதிப்படுத்தாத குற்றச்சாட்டு தொடர்பிலே கேள்வி எழுப்பப்படுகிறது இதன் மூலம் அமெரிக் காவின் இரட்டை வேடம் தெரிகிறது: அமைச்சர் டியூ. குணசேகர!
Wednesday,April,04,2012இலங்கை::ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருக்காத காலப் பகுதிகளிலே இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான உறவு உயர் மட்டத்தில் இருந்துள்ளது. தந்திரோபாய முன்னெடுப்பாக இந்தியா, இலங்கைக்கு எதிராக வாக்களித்திருந்தாலும் இதன் மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் பாதிப்பு ஏற்படாதென சிரேஷ்ட அமைச்சர் டியூ. குணசேகர கூறினார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முன்வைக்கப்பட்ட சர்வதேச யோசனைகளை ஏற்காததாலே இலங்கைக்கு எதிரான பிரேரணை முன் வைக்கப்பட்டது. கொள்கை ரீதியான கார ணங்களினாலே நாம் இதனை எதிர்த்ததோடு இந்த பிரேரணை நிறைவேறி யது முழு வலய நாடுகளுக்கும் ஏற்பட்ட தோல்வி யாகும் எனவும் அமைச்சர் கூறினார்.
ஜெனீவாவில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பாக நேற்று பாராளுமன்றத்தில் விசேட விவாதம் நடைபெற்றது. இங்கு உரை யாற்றிய அமைச்சர், பயங்கரவாதம் நிலவிய காலத்தில் பல அரசுகள் ஆட்சி யில் இருந்தன.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் தொடர்பில் ஐ.நா. மனித உரிமை பேரவையில் பிரேரணை முன்வைக்கப்பட்டது. 1983 காலத்தில் இடம் பெற்ற கறுப்பு ஜுலை குறித்தோ 1988ல் இடம்பெற்ற அரச பயங்கரவாதம் குறித்தோ சர்வதேச மட்டத்தில் யாரும் கேள்வி எழுப்பவில்லை.
யுத்தத்தின் போது மக்கள் இறப்பது சகஜம் என ஆப்கான் யுத்தம் தொடர்பில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் கூறினார். ஆனால், இலங்கையில் உறுதிப்படுத்தாத குற்றச்சாட்டு தொடர்பிலே கேள்வி எழுப்பப்படுகிறது. இதன் மூலம் அமெரிக் காவின் இரட்டை வேடம் தெரிகிறது.
யுத்தத்தின் இறுதி நாட்களில் யுத்தத்தை நிறுத்தவும் தலையீடு செய்யவும் ஐ. நா. படையை அனுமதிக்கவும் சர்வதேச மட்டத்தில் இருந்து அழுத்தம் வந்தது. இதனை ஏற்காததாலே இவ்வாறு குரோத நோக்கத்துடன் இலங்கைக்கு எதிராக யோசனை முன்வைக்கப்பட்டது.
இந்தியா மேலைத்தேய நாடு என்று கூறும் குற்றச் சாட்டை ஏற்க முடியாது. இங்கு பிரச்சினை ஏற்படும் போது தமிழ் நாட்டில் அதன் பிரதிபலன் வெளிப்படும். இலங்கைக்கும் இந்தியா வுக்குமிடையிலான உறவு ஐ. தே. க. ஆட்சி அற்ற காலத்திலே உயர் மட்டத்தில் இருந்தது. இலங்கைக்கு எதிராக வாக்களிக்க இந்தியாவுக்கு உரிமை உள்ளது. அது தொடர்பில் எமக்கு இந்தியாவுடன் எதுவித குரோதமும் கிடையாது. இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால் மன்மோகன் சிங்கிற்கு அங்கு இருக்க முடிந்திருக்காது. இரு நாடுகளுக்குடையிலான நெருங்கிய உறவு தொடர்ந்து காணப்படுகிறது.
அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கை தேசிய தேவைக்கேற்ப கூடியது. ஈராக் கிற்கோ, ஆப்கானிஸ்தானுக்கோ தலையிடும் போது ஐ.நா. வின் அனுமதி பெறப்பட வில்லை. ஆனால், இன்று ஐ.நா. வின் தலையீட்டுடனே தலையீடு செய்ய வேண்டியுள்ளது. இது சர்வதேச அதிகார மாற்றமே காரணம். ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான பிரேரணை தோல்வி அடையும் என நாம் அறிந்திருந்தோம். ஆனால் இந்த தோல்வி எமக்கு மட்டுமன்றி முழு வலய நாடுகளுக்கும் ஏற்பட்ட தோல்வியாகும். நாம் கொள்கை ரீதியான காரணத்தின் கீழே இதனை எதிர்த்தோம். தனி நாட்டிற்கு எதிரான தலையீட்டையே எதிர்த்தோம்.
இந்தியா தந்திரோபாயமாக முன் னெடுப்பை மேற்கொண்டது. இந்தியாவிற்கு உள்ளக பிரச்சினை இருக்கும். வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுதல், தமிழக அழுத்தம் காரணமாக இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது.
நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கை வெளியிட்டு 3 மாதங்களே செல்கிறது. இதிலுள்ள முதலாவது சிபார்சு புனர்வாழ்வு அளித்து முன்னாள் புலிகளை விடுவிப்ப தாகும். அதில் 11,696 பேர் குறுகிய காலத் தில் சமூக மயப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு கல்வி, தொழிற்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 300 பேர் பல் கலைக் கழகங்களில் உள்ளனர். சரத் பொன்சேகா இருந்திருந்தால் இவர்களை விடுவிக்க விட்டிருக்கமாட்டார். 3 இலட்சம் பேரில் அநேகர் மீள்குடியேற் றப்பட்டுள்ளனர். அரசாங்கம் முன்னெடுக்கும் நல்ல விட யங்களை பாராட்ட தமிழ் தேசிய கூட்ட மைப்பு தயாராக இல்லை. விமர்சிக்கும் போது நியாயமான முறையில் அதனை வெளியிட வேண்டும். சகல அரசியல் கட்சிகளும் இணைந்தே பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும்.
தேசியப் பிரச்சினை தீர்வு தொடர்பில் இரு பிரதான கட்சி களுக்கும் முக்கிய பொறுப்பு இருப்பதாக நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண அனைவரும் ஒன்றுபட வேண்டும். எமது கொள்கை ரீதியான கருத்துணர்வை தொடர்ந்து முன்னெடுப்போம்.
No comments:
Post a Comment