Pages

Wednesday, April 4, 2012

பிரபாகரனால் முடியாதவற்றை பராக் ஒபாமாமூலம் நிறைவேற்ற எதிர்கட்சிகள் முயற்சி - அமைச்சர் விமல் விரவன்ச!

Wednesday,April,04,2012
இலங்கை::எதிர்க்கட்சிகள் நாட்டுக்கு எதிராக செயற்பட்டு வருவதாக வீடமைப்பு அமைச்சர் விமல் விரவன்ச தெரிவித்துள்ளார்.

ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் நாட்டுக்கு எதிராக பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெற்றிகரமாக முறியடித்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனினால் நிறைவேற்றிக் கொள்ள முடியாதவற்றை அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவைக் கொண்டு எதிர்க்கட்சிகள் நிறைவேற்ற முயற்சிக்கின்றன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தொடர்பில் பாராளுமன்றில் நடைபெற்ற விவாத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் நடவடிக்கைகளை அமைச்சர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

வெளிநாட்டு சக்திகளின் உதவியுடன் நாட்டை ஆட்சிப் பொறுப்பை கைப்பற்ற சில சக்திகள் முனைப்பு காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment