Pages

Monday, March 26, 2012

யாழ் அரச அதிபரின் பாதுகாப்பிற்காக பயணித்த பொலிஸ் வண்டி விபத்து!

Monday, March 26, 2012
இலங்கை::யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரின் பாதுகாப்பிற்காக பயணித்த பொலிஸ் ஜீப் வண்டி விபத்துக்குள்ளானதில் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று நண்பகல் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் - மானிப்பாய் - சண்டிலிப்பாய் பிரதேசத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

விபத்தில் காயமடைந்தவர்கள் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறினார்.

No comments:

Post a Comment