Pages

Monday, March 26, 2012

எமது உடன்பாடின்றி இலங்கையின் விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் மனித உரிமை ஆணையாளருக்கு இல்லை - மஹிந்த மரசிங்க!

Monday, March 26, 2012
இலங்கை::எமது உடன்பாடின்றி இலங்கையின் விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் மனித உரிமை ஆணையாளருக்கு இல்லை - மஹிந்த மரசிங்க

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் எமது உடன்பாடின்றி இலங்கையின் விவகாரங்களில்தலையிடும் அதிகாரம் மனித உரிமை ஆணையாளருக்கு இல்லை என அமைச்சர் மஹிந்த மரசிங்க தெரிவித்தார். இலங்கை அரசாங்கத்தின் உடன்பாடு இன்றி மனித உரிமை ஆணையாளனால் தொழில்நுட்ப ஆலோசனை உள் ளிட்ட எந்த உதவியையும் எமக்கு வழங்க முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உமைப் ளூபரவையின் 19 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தூதுக்குழுவின் தலைவராக அமைச்சர் சமரசிங்க செயற்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று நாடு திரும்பிய அமைச்சர் ஜெனிவா தொடர்பாக கருத்து வெளியிடும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பின்போது 24 நாடுகள் ஆதரவாகவும் 15 நாடுகள் எதிராகவும் வாக்களித்ததுடன் 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை.
இதேவேளை யுத்தத்தின் பின்னரான காலத்தில் நாங்கள் பல்வேறு விதமான முன்னேற்றத்தை வெளிக்காட்டியுள்ளோம். அது போன்று எதிர்காலத்திலும் தொடர்ந்து முன்னேற்றங்களை வெளிக்காட்ட நடவடிக்கைகளை எடுப்போம்.
முக்கியமாக நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த தொடர்ந்து அர்ப்பணிப்புடன் வேலைத்திட்டங்களை எமது அரசாங்கம் முன்னெடுக்கும். குறிப்பாக இலங்கைக்கு எதிரான பிரேரணை பேரவையில் சமர்ப்பிக்கப்படும் முன்னர் நான் அங்கு உரையாற்றியிருந்தேன்.

நான் அன்று நிகழ்த்திய உரையுடன் இந்தப் பிளூரரணையை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியுள்ளது. காரணம் எனது அந்த உரையில் நாங்கள் எவ்வாறு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல் படுத்தப்போகின்றோம் என்பது குறித்து விவாக விளக்கியிருந்தேன்.

முக்கியமாக இராணுவம் மற்றும் கடற்படைத் தரப்பு மேற்கொண்டுவரும் விசாரணைகள் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் உள்ளிட்ட முழுமையான எமது வேலைத் திட்டம் குறித்து நான் எனது உரையில் விட யங்களை உள்ளடக்கியிருந்தேன்.

அந்த வகையில் மேலும் எதிர்காலத்திலும் நாங்கள் தேசிய நல்லிணக்க வேலைத்திட்டத்தில் முன்னேற்றங்களை வெளிக்காட்டுவோம். என்னைப் பொறுத்த வரையில் நான் எனது பொறுப்பை செய்தேன் அத்துடன் வெளிவிவகõர அமைச்சர் ஜீ.எல். பீரிஸும் ஜெனீவாவில் கடின உழைப்பை மேற்கொண்டார் எனவும் அமைச்சர் சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment