Pages

Tuesday, March 27, 2012

ஜானக பெரேரா கொலை வழக்கு மே மாதம் முதல் விசாரணை!

Tuesday, March 27, 2012
இலங்கை::மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 29 பேர் கொலை செய்யப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய வழக்கை எதிர்வரும் மே மாதம் 17 ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி சுனந்த குமார ரத்நாயக்க இன்று அறிவித்தார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ள இரண்டு புலி சந்தேகநபர்களைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு மீதான விசாரணைகள் அனுராதபுரம் மேல்நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதிவாதிகளுக்கு சட்டத்தரணிகள் ஒத்துழைப்பு இன்மையினால் வழக்கு மீதான விசாரணைகள் காலதாமதமாவதாக முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பிரதிவாதிகளுக்கு சட்டத்தரணிகளின் ஒத்துழைப்பு வழங்கப்பட்டாலும், வழங்கப்படாவிடினும் எதிர்வரும் மே மாதம் 17 ஆம் திகதி இந்த வழக்கு மீதான விசாரணைகள் இடம்பெறும் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பிரதிவாதிகளுக்கு சட்டத்தரணிகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment