Tuesday, March 27, 2012

மட்டக்களப்பு-காத்தான்குடி பிரதானவீதியில் பாரிய விபத்து!

Tuesday, March 27, 2012
இலங்கை::மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி அந்நாஸர் வித்தியாலயத்திற்கு முன்னால் இடம் பெற்ற பாரிய வீதி விபத்துச் சம்பவத்தில் கணவன் மனைவி குழந்தை ஆகியோர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 7.25 மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரிய கனரக லொறியொன்றின் பின்னால் மோதியபோதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிச்சென்ற காரே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறித்த காரின் சாரதி தூக்கத்திலிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காத்தான்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மாத்தளை - பலகடுவ - வெலிகந்த சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலி!

மாத்தளை-பலகடுவ-வெலிகந்த சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானதோடு மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றதாக அலவத்துகொட பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டியில் இருந்து மாத்தளை நோக்கி பயணித்த லொறியும் எதிர்திசையில் பயணித்த ஹொரபபொத்தான டிப்போவுக்குச் சொந்தமான இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் பஸ்ஸில் பயணித்த நால்வர் லொறி சாரதி ஆகியோர் படுகாயமடைந்து மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது சிகிச்சை பலனின்றி 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் அலவத்துகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment