Tuesday, March 27, 2012இலங்கை::சிறை வைக்கப்பட்டிருந்த யாழ் மாநகர சபை முன்னாள் உதவி முதல்வர் துரைராஜா இளங்கோ (றீகன்) மற்றும் சாவகச்சேரி நகரசபை எதிர்க்கட்சித் தலைவர் சூசைமுத்து அலெக்ஸ்சாண்டர் (சார்ள்ஸ்) ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவ்விரு சந்தேகநபர்களும் இன்று யாழ். நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் சாவகச்சேரி நீதவானின் யாழ். வாசஸ்தலத்தைச் சுற்றி ஆயுதத்துடன் நடமாடியதாக கிடைக்கப்பெற்ற மொட்டைக் கடிதமொன்றில் அடிப்படையில் இவ்விருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
யாழ் நீதவான் கணேசராஜா இன்று இவர்களை விடுவித்து தீர்ப்பளித்ததோடு, ஒரு மொட்டைக் கடிதத்தின் அடிப்படையில் எந்தவித ஆதாரங்களுமற்ற இந்த விசாரணை சட்டப்படி தவறென்றும் தெரிவித்திருந்தார்.
No comments:
Post a Comment