Pages

Friday, March 23, 2012

களுவன்கேணிக் கிராமத்திற்கு கிழக்கு முதல்வர் திடீர் விஜயம்!

Friday, March 23, 2012
இலங்கை::கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் நேற்று களுவன்கேணிக் கிராமத்தில் பல பகுதிகளுக்கு நேரில் சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடி அவர்களது அடிப்படைப் பொதுப் பிரச்சினைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வினையும் உடனே வழங்கினார்.

குறிப்பாக போக்குவரத்து இடையூறாக அமைந்துள்ள கிராமி உள்வீதிகள் புணரமைத்தல் மற்றும் மின்சாரம் அத்தோடு குறித்த சில வீதிகளுக்கான கல்வெட்டுக்கள் அமைத்தல் என்பன தொடர்பாக கலந்துரையாடி உடனடியாக களுவன்கேணி தளவாய் இணைப்பு வீதி மற்றும் சிங்காரத்தோப்பு கிராமத்திற்கு மின்சார வசதி அத்தோடு களுவன்கேணி தோணாவீத்க்கான கல்வெட்டு என்பன உடனடியாக ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தார்.

இந் நிகழ்வில் ஏறாவூர்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சிதம்பரப்பிள்ளை வினோத் உட்படகட்சியின் முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment