Pages

Friday, March 23, 2012

செனட் உறுப்பினர் ஆதரவு 2016 அதிபர் தேர்தலில் ஹிலாரி போட்டியிடலாம்!


Friday, March 23, 2012
வாஷிங்டன்::அமெரிக்காவில் 2016ம் ஆண்டு நடக்க உள்ள அதிபர் தேர்தலில், ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளின்டனை நிறுத்தலாம் என்று செனட் உறுப்பினர் கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடக்க உள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் ரோம்னி முக்கிய வேட்பாளராக இருக்கிறார். இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராக பதவி வகிக்கும் ஹிலாரி கிளின்டனை, அடுத்த 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக அறிவிக்கலாம் என்று நியூயார்க் செனட் உறுப்பினர் கிறிஸ்டன் ஜில்லிபேண்ட் கருத்து தெரிவித்துள்ளார். ஒரு பேட்டியில் கிறிஸ்டன் கூறுகையில், அதிபர் பதவிக்கு மிகவும் நம்பிக்கையானவர் ஹிலாரி என்று தெரிவித்துள்ளார்.

எனினும், அதிபர் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை. தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் பதவி காலம் முடிந்தவுடன் சமூக சேவையில் ஈடுபடுவேன். இன்னொரு முறை அமைச்சர் பதவியும் ஏற்க மாட்டேன் என்று ஹிலாரி தொடர்ந்து கூறி வருகிறார். இதுகுறித்து கிறிஸ்டன் கூறுகையில், ஹிலாரியை வற்புறுத்துவேன். அதிபர் தேர்தலில் போட்டியிட அவர் ஒப்புக் கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது என்கிறார்.

No comments:

Post a Comment