Friday, March 23, 2012இலங்கை::யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த தென்னிலங்கையைச் சேர்ந்த இரு நடைபாதை வர்த்தகர்கள் கைது:-
யாழ்.நகரில் நேற்று மாலை விசேட குற்றப்புலனாய்வுத்துறை பொலிஸார் மேற்கொண்டிருந்த தேடுதலின் போது போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த தென்னிலங்கையைச் சேர்ந்த இரு நடைபாதை வர்த்தகர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.அண்மைக்காலமாக தென்னிலங்கையிலிருந்து நடைபாதை வர்த்தகர்களின் வருகை யாழ்ப்பாணத்தில் அதிகரித்திருக்கின்றது.
இந்த நிலையில் நடைபாதை வியாபாரிகளே யாழ்.குடாநாட்டில் போதைப்பொருள் வியாபாரிகள் என நேற்றுக் காலை யாழ்.மாநகர சபையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நகரிலுள்ள புல்லுக்குளத்திற்கருகிலுள்ள நடைபாதை வியாபாரக் கடைத்தொகுதியில் சிவில் உடையில் விசேட குற்றத்தடுப்பு புலனாய்வுத்துறையினர் மாலை 3.00 மணியளவில் நடவடிக்கையொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது குறித்த நபர்கள் இருவரும், தாம் வைத்திருந்த போதைப்பொருட்களை குளத்தில் வீசிவிட்டுத் தப்பிக்க முயற்சித்துள்ளனர்.
எனினும் குறித்த நபர்களை உடனடியாக கைது செய்யத பொலிஸார் குளத்தில் பாய்ந்து எறிந்த போதைப்பொருட்களையும் மீட்டுள்ளனர்.
இதில் சுமார் 8லட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளும், கஞ்சாவும் இருந்துள்ளது.
இவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த நிலையில் யாழ்.நகரில் புல்லுக்குளம் பல குற்றச் செயல்களின் மையமாக மாறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
போலி நாணய தாள்களை வைத்திருந்த மற்றும் போலி நாணய தாள்களை பயன்படுத்தி கொள்வனவு செய்தவர்கள் கைது!
போலி நாணய தாள்களை வைத்திருந்த மற்றும் போலி நாணய தாள்களை பயன்படுத்தி கொள்வனவு செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தம்பலகமுவ பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது இவர்களிடமிருந்து ஆயிரம் ரூபா பெறுமதியான போலி நாணய தாள்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பெண் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவர்களை கந்தளாய் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment