Pages

Sunday, February 5, 2012

கடும் விதிமுறைகள் ரத்து டிஸ்னி ஊழியர்கள் தாடி வளர்க்க அனுமதி!

Sunday, February 05, 2012
நியூயார்க்::உலகின் மிகப்பெரிய பொழுது போக்கு மையம் டிஸ்னி வேர்ல்டு. பிரபலான கார்டூன் கேரக்டர் மிக்கி மவுஸ் உள்பட பல்வேறு அம்சங்கள் நிறைந்த இடம். இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் உண்டு. இப்படித்தான் ஆடை அணிய வேண்டும். தாடி வளர்க்க கூடாது என்றெல்லாம் விதி உள்ளது. ஆனால், குறுந்தாடி வளர்த்துக் கொண்டு பொழுது போக்கு மையத்தில் வலம் வரவேண்டும் என்பது இங்குள்ள ஊழியர்களின் பல ஆண்டு கனவு. இதை இப்போது டிஸ்னி நிர்வாகம் நனவாக்கி உள்ளது. பழைய விதிகளை தளர்த்தி, இனிமேல் ஊழியர்கள் தாடி வளர்த்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. அத்துடன், வெள்ளிக்கிழமைதோறும் சீருடை இல்லாமல் தங்கள் விருப்பம் போல் ஆடை அணிந்து பணிக்கு வரலாம் என்று கூறியுள்ளது. இதுகுறித்து டிஸ்னி செய்தித் தொடர்பாளர் பெட்ஸி சன்செஸ் கூறுகையில், ÔÔடிஸ்னிக்கென்று உள்ள பாரம்பரியம் சிதையாமல் இருக்க வேண்டும். இதில் கவனமாக இருக்கிறோம். அதன்படி விதிமுறைகள் அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது. அதன்படி இப்போது ஊழியர்கள் தாடி வளர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், குறுந்தாடிதான் வளர்க்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment