Pages

Thursday, January 5, 2012

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் பயங்கர தீ: பல கோடி சேதம்!

Thursday,January 05, 2012
புதுடெல்லி:டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்திரா காந்தி விமான நிலையத்தில் உள்ள சரக்கு ஏற்றும் முனையத்தில், நேற்றுப் இரவு சுமார் 1 மணி அளவில் தீப்பற்றியது. தீயை அணைக்க, தீயணைப்பு வாகனங்கள், விபத்து ஏற்பட்ட இடத்திற்கு விரைந்து சென்றன.

4 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு, தீ முற்றிலுமாய் அணைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து, விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விமான நிலைய சரக்கு முனையத்தின் முதல் தளத்தில் 10 விமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஏற்பட்ட தீ விபத்தில், செலேபி விமான நிறுவனத்தின் அலுவலகம் முற்றிலுமாக சேதம் அடைந்து உள்ளது. இந்த விபத்தில், உயிர்ச்சேதம் ஏதும் நிகழவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில் திடீர் என்று தீவிபத்து ஏற்பட்டது. இதில் யாரும் பலியானதாக தகவல்கள் இல்லை.

டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில் உள்ள செல்பி என்ற நிறுவனத்தின் மனிதவள துறையில் நள்ளிரவு 12.45 மணிக்கு திடீர் என்று தீ பிடித்தது. இது குறித்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து 35 தீயணைப்பு வண்டிகள் விமான நிலையத்திற்கு விரைந்து வந்து சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தன.

சரக்கு முனையத்தின் முதல் தளத்தில் தீ பிடித்ததில் ஏர் இந்தியா, கல்ப் ஏர், தாய் ஏர், ஏரோபிலோட் உள்பட 10 பிரபல ஏர்லைன் நிறுவனங்களின் அலுவலகங்கள் தீயில் கருகி நாசமாகின. இதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இருப்பினும் குடோனில் இருந்த சரக்குகளுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீ பிடித்ததும் அங்கிருந்தவர்கள் விமான நிலையத்தில் உள்ள உபகரணங்களை வைத்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

தீ விபத்துக்கான காரணம் என்னவென்று இன்னும் தெரியவில்லை.

No comments:

Post a Comment