Pages

Thursday, January 5, 2012

தமிழகத்தில் இறுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

Thursday,January 05, 2012
சென்னை:தமிழகத்தில் இறுதி வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக தயாரிக்கப்பட்ட இறுதி வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 30 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த பட்டியல் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய
வாக்காளர்களுக்கு வரும் ஜனவரி 25ம் தேதி புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அட்டை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த
மாவட்டங்களில் வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். வாக்குசாவடி மையம், வட்டாச்சியர் அலுவலகங்கள், ஆட்சியர்
அலுவலகங்களில் வாக்காளர் பட்டியலை காணலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment