Pages

Thursday, January 5, 2012

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்கள் கைது:மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்!

Thursday,January 05, 2012
இலங்கை::சட்ட விரோத முறையில் கடல் எல்லையை மீறி இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்த நான்கு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த மீனவர்களுடன் அவர்களின் படகுகளும் இன்று அதிகாலை தலைமன்னார் வடக்கு கடற்பிரதேசத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் தற்போது தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இன்று அவர்களை மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment