Thursday,January 05, 2012இலங்கை::இன்று அதிகாலை வேளையில் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பெற்றோல் குண்டு வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது:-
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பெற்றோல் குண்டு வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இன்று அதிகாலை வேளையில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பல்கலைக்கழக வளாகத்தில் காணப்பட்ட நினைவுச் சிலையொன்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
பகிடி வதைக்கு ஆதரவான தரப்பினர் இந்த குண்டை வெடிக்கச் செய்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம்பெற்று வரும் பகிடிவதைச் சம்பவங்களை தடுக்கும் நோக்கில் பல்கலைக்கழக நிர்வாகம் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், அதற்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் எவருக்கும் காயங்களோ உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை.
No comments:
Post a Comment