Pages

Wednesday, January 4, 2012

யாழ்ப்பணம் ஸ்ரான்லி கல்லூரி சந்திக்கு அருகில் குழந்தையை பணயம் வைத்து பெரும் கொள்ளை!

Wednesday,January,04,2012
இலங்கை::யாழ் ஸ்ரான்லி கல்லூரி சந்திக்கு அருகில் குழந்தையை பணயம் வைத்து பெரும் கொள்ளை.

யாழ்ப்பணம் ஸ்ரான்லி கல்லூரி சந்திக்கு அருகாமையிலுள்ள வீடு ஒன்றில் குழந்தையின் உயிரைப் பணயம் வைத்து கொள்ளையர் குழு வீட்டில் உள்ள 3 இலட்சம் ரூபா பணத்தையும், 10 பவுண் தங்க நகைகளையும் மற்றும் 3 கையடக்க தொலைபேசி, டிஜிட்டல் கேமரா ஆகிய சாதனங்களையும் கொள்ளையடித்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாகத் தெரிய வருவதாவது, நேற்று செவ்வாய்கிழமை இரவு 8 .30மணியளவில் முகத்திற்கு கறுத்த துணியால் மறைத்துக் கொண்ட கொள்ளையர் குழு வாள், கிறிஸ்கத்தி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வீட்டினுள் நுழைந்து குழந்தையை பணயம் வைத்து அச்சுறுத்தி வீட்டில் உள்ள காசு, உடமைகளைத் தருமாறு அதட்டினர். குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக வீட்டில் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை இவர்களை பணயக்கைதிகளாக வைத்து வீட்டில் தேடுதல் நடத்தி பணத்தையும் உடமைகளையும் மற்றும் இலத்திரனியல் சாதனங்களையும் கொள்ளையடித்துள்ளனர்.

குழந்தையின் உயிரைப் பணயம் வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த துணிகரக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. போலீசார் விசாரனைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment