Tuesday, January 03, 2012 12சென்னை: தமிழக மக்கள் ஆங்கிலப் புத்தாண்டை எந்தளவுக்கு உற்சாகத்துடன் வரவேற்றுக் கொண்டாடியுள்ளனர் என்பது 2 நாளில் மது விற்பனையான விவரத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய இருநாட்களில் மட்டும் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளில் ரூ.142 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாம்.
புத்தாண்டு, விடுமுறை, விசேஷங்களை முன்பெல்லாம் கோவில்களுக்கு, வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்றும், குடும்பத்தோடு திரைப்படங்களுக்குப் போயும், உறவினர்கள், நண்பர்களோடும் விருந்து சாப்பிட்டும் கொண்டாடுவது வழக்கம்.
ஆனால் இப்போதெல்லாம் தண்ணி அடித்துதான் கொண்டாடுகிறார்கள். இதில் வயது வித்தியாசமெல்லாம் கிடையாது. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை மப்பு இல்லாவிட்டால் எந்த கொண்டாட்டமும் மந்தகாசமாக இருக்காது.
அந்த வகையில் 2012ம் ஆண்டுப் பிறப்பையும் தமிழ்நாட்டு மக்கள் குடியும்
கூத்துமாக கொண்டாடியுள்ளனர். டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய இரு நாட்களில் மட்டும் தமிழக டாஸ்மாக் கடைகளில் ரூ. 142 கோடி அளவுக்கு மது விற்பனையாகியுள்ளதாம்.
தமிழகம் முழுவதும் 6,696 டாஸ்மாக்கடைகள் உள்ளன. தலைநகர் சென்னையில் 441 கடைகள் உள்ளன. அத்தனை கடைகளும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1ம் தேதியன்று படு பிசியாக செயல்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு ரூ. 105 கோடி அளவுக்கு மட்டுமே மது விற்பனையாகியிருந்தது. இந்த ஆண்டு ரூ. 37 கோடி கூடுதலாக விற்பனையாகியுள்ளது.
சபாஷ்...!
No comments:
Post a Comment