Tuesday, January 3, 2012

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை நாராந்தனை தெற்குப் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒருதொகை ஆயுதங்கள் கடற்படையினரால் மீட்பு!

Tuesday, January 03, 2012 12
இலங்கை::யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை நாராந்தனை தெற்குப் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒருதொகை ஆயுதங்கள் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாரந்தனை கடற்படையினரின் எல்லைக்குட்பட்ட பகுதி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு தொகுதி ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இது தொடர்பாக பொதுமகனொருவரால் கடற்படையினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து கடற்படையினர் ஊர்காவற்துறை பொலிசாரிடம் முறையிட்டுள்ளனர். இதையடுத்து நடத்தப்பட்ட தேடுதலிலேயே திட்டமிட்ட வகையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சம்பவம் தொடர்பாக ஊர்காவற்துறை பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment