Tuesday, January 03, 2012 12கடலூர் : தானே புயல் தாக்கிய கடலூர் மாவட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் 26 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வருவாய் துறை, விவசாய துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் மாவட்டம் முழுவதும் ஏற்பட்ட சேதம் குறித்து கணக்கெடுத்து வருகிறார்கள்.
இன்னும் 2 அல்லது 3 நாளில் கணக்கெடுப்பு பணி முடிந்துவிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கடலூர் மாவட்டத்தில் மட்டும் சேதம் ரூ.1,000 கோடிக்கு மேல் இருக்கும் என்றும், விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.200 கோடிக்கு மேல் சேதம் இருக்கும் என்றும் அதிகார பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன
புயல் பாதிப்பு குறித்து மத்திய குழு ஆய்விற்கு பின் நிவாரண உதவி அறிவிக்கப்படும் : ப.சிதம்பரம்!
கடலூர்: தானே புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மத்தியக் குழு ஆய்வு செய்த பிறகு, மத்திய அரசின் நிவாரண உதவி அறிவிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தானே புயலால் அதிக சேதத்தை சந்தித்த புதுச்சேரி, கடலூர் பகுதிகளை ப.சிதம்பரம் இன்று நேரில் பார்வையிட்டார்.
இதனையடுத்து, கூடப்பாக்கம், கோரிக்காடு, டி.என்.பாளையம், நரம்பை, மூர்த்திக் குப்பம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்த அவரிடம், மக்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். அப்போது, மத்தியக் குழு நாளை மறுநாள் தமிழகம் வர இருப்பதாகவும், ஆய்வுக்குப் பிறகு அந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நிவாரண உதவி அறிவிக்கப்படும் என்று ப.சிதம்பரம் உறுதியளித்தார்.
No comments:
Post a Comment