Pages

Thursday, December 8, 2011

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் காணாமல்போனவர் நேற்றுக் காலை சடலமாக மீட்பு!

Thursday,December,08,2011
இலங்கை: முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒட்டுசுட்டான் பகுதியில் காணாமல்போனவர் நேற்றுக் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் காணாமல்போன ஒட்டுசுட்டான் பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய சிவபாதம் உதயகுமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

கச்சலாம் மடு குளத்தில் மிதந்துகொண்டிருந்த நிலையிலேயே இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment