Pages

Thursday, December 8, 2011

இந்தோனேசியாவில் இடம்பெற்றுவரும் நான்காவது பாலி ஜனநாயக நாடுகளின் மாநாட்டில் -இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ!

Thursday,December,08,2011
இலங்கை: சமூக கட்டமைப்புக்குள் பிரதான இடத்தை கல்வி பெற்றிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவில் இடம்பெற்றுவரும் நான்காவது பாலி ஜனநாயக நாடுகளின் மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர் சஜீன் வாஸ் குணவர்தன மற்றும் மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் அகியோர் ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில் இணைந்துள்ளனர்.

இந்தோனேசியாவில் இடம்பெறும் பாலி ஜனநாயக நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்கான ஜனாதிபதி நேற்று மாலை பாலி சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.

பாலித்தீவிலுள்ள நுசாதுவா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்றும் நாளையும் ஜனநாயகம் தொடர்பான மாநாடு இடம்பெறவுள்ளது.

இந்தோனேசியாவின் ஜனாதிபதி டாக்டர் சுசிலோ பம்பங் யுதோயோனாவின் விஷேட அழைப்பின்பேரிலேயே ஜனாதிபதி மாநாட்டில் கலந்துகொள்வதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றமடையும் உலகில் ஜனநாயக ரீதியான பங்குபற்றலை விரிவுபடுத்தல் 'ஜனநாயக ரீதியான குரல்களுக்கு பதிலளித்தல்" என்பனவே இந்த இரு மாநாட்டின் தொனிப்பொருள்களாகும்.

பிராந்திய நாடுகளைச்சேர்ந்த சுமார் 15 நாட்டு அரச தலைவர்கள் இம்மாநாட்டில் பங்குபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment