Pages

Thursday, December 8, 2011

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இரகசியங்களை புலிகளுக்கு வழங்கியதாக இராணுவ வீரருக்கெதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

Thursday,December,08,2011
இலங்கை: இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இரகசியங்களை புலிகளுக்கு வழங்கியதன் மூலம் தேசத்தின் மகுடம் கண்காட்சியின் போது தாக்குதல் நடத்துவதற்காக திட்டமிடப்பட்டதாக இராணுவ வீரருக்கெதிராக சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இத்தாக்குதல்களை நடத்த உதவியதாக இரத்மலானை இடைத்தங்கல் முகாமைச் சேர்ந்த லெப்டினன் ஒருவருக்கெதிராகவே கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

ஆம் அங்கிள்“ என அழைக்கப்படும் லெப்டினன்ட் ரஞ்சித் சந்திரசிறி பெரரா என்ற இராணுவ புலிகளின் தற்கொலைப்படையைச் சேர்ந்த கந்தவனம் கோகுலநாத் மற்றும் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த கனகரட்ணம் ஆதித்யன் ஆகியோருக்கு பாதுகாப்பு இரகசியங்களை குறித்த வீரர் தெரிவித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

யுத்தகாலத்தில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் பலாலிக்குச் சென்ற போது அவர்களது வான்கலத்திற்கு புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment