Tuesday, October 04, 2011அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லிமுல்லைப் பகுதியில் கஞ்சா வைத்திருந்த ஒருவரை கைது செய்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மல்கம்பிட்டி - அல்லிமுல்லை வீதியால் கல்முனையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த நபரிடமிருந்து 400 கிராம் நிறையுள்ள கஞ்சா பொதி நேற்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
கஞ்சா கடத்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அப்பகுதிக்கு சென்ற விசேட பொலிஸ் குழுவினரே இவற்றை கைப்பற்றியதாக சம்மாந்துறை பெருங்குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
குறித்த நபர் சாய்ந்தமருது பிரதேசத்தினை சேர்ந்தவர் எனவும், இக்கஞ்சாப் பொதி சுமார் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியானது எனவும் சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment