Pages

Tuesday, October 4, 2011

நுவரெலியாவிலும் வானூர்தி தளம் - ஜனாதிபதி!

Tuesday, October 04, 2011
நுவரெலியாவில் புதிய உள்ளக வானூர்தி தளம் ஒன்றை நிர்மாணிப்பதன் பொருட்டு பொருத்தமான இடம் ஒன்றை இனங்கண்டு தமக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

நுவரெலியா ஜனாதிபதி மாளிகையில் நேற்று அரசியல் துறையினர், வர்த்தகர்கள், மற்றும் தொழிற்றுறையினரை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

சுற்றுலாத்துறையின் உயரிய பிரதிபலனை நுவரெலிய மாவட்ட மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி இந்த சந்திப்பில் தெரிவித்தார்.

அதேவேளை, நாட்டில் தற்போது சகல துறைகளும் துரிதமாக மேம்பட்டு வரும் நிலையில், தொழிலின்மை 4 வீதமான குறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வீட்டுப்பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்களில் எண்ணிக்கை குறைவடைந்துள்ள நிலையில், ஆண் பணியாளர்களின் எண்ணிக்கை 54 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, இலங்கையின் விசாலமான ஹம்பாந்தோட்டை நிர்வாக கட்டிடத்தை ஜனாதிபதி இன்று பிற்பகல் திறந்து வைக்கவுள்ளதாகவும் அங்குள்ள எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்துள்ளார்....

கண்டியில் வானூர்தி நிலையம் - ஜனாதிபதி!

கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.

இதேவேளை, சுற்றுலா துறையினர் உரிய பிரதி லாபங்களை பெற்றுக்கொள்ள உள்ளுர் வான்தளம் ஒன்றை ஸ்தாபிக்கப்படவுள்ளது.

இதற்கான இடத்தை இணங்கணுமாறு மத்திய மாகாண முதலமைச்சருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment