Pages

Tuesday, October 4, 2011

மேலும் ஒரு கைதி வாவியில் வீழ்ந்து தற்கொலை!

Tuesday, October 04, 2011
மொரட்டுவ முகத்துவாரம் பிரதேசத்தில் காவல்துறை உத்தியோகத்தரை கொலை செய்தமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர் பொல்கொட வாவியில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர், ஆயுதம் ஒன்றை மறைத்து வைத்திருப்பதாக கூறி காவல்துறையினரை, அண்மைய பிரதேச மொன்றிற்கு அழைத்து சென்ற போதே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்.

மொரட்டுவ முகத்துவாரம் காவல்துறையில் சேவையாற்றிய காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில் நேற்று காலை மரணமானார்.

மொரட்டுவ தேசிய வீட்டுத் தொகுதியின் அண்மையில் நேற்று இருதரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலை சுமூகமாக்கும் நோக்கில் சென்ற காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி மரணித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment