Pages

Saturday, August 20, 2011

மேற்குலகின் இரட்டை வேடத்தை அனைத்துலக மட்டத்தில் அம்பலப்படுத்த இலங்கை அரசாங்கம் தவறி விட்டதது-கோமின் தயாசிறி!

Saturday, August 20, 2011
மேற்குலகின் இரட்டை வேடத்தை அனைத்துலக மட்டத்தில் அம்பலப்படுத்த இலங்கை அரசாங்கம் தவறி விட்டதாக பிரபல சட்டவாளரும், சிங்களத் தேசியவாதியுமான கோமின் தயாசிறி குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுகளை முறியடிக்க சிங்களத் தேசியவாத அமைப்புகளின் சார்பில் www.outofwar.com என்ற இணையத்தளத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசானது ஐ.நா நிபுணர்குழு அறிக்கை, சனல்-4 ஆவணப்படம் ஆகியவற்றை வைத்துக் கொண்டு இலங்கையைத் தனிமைப்படுத்த முனையும் மேற்குலகின் இரட்டை வேடத்தை அனைத்துலக மட்டத்தில் அம்பலப்படுத்த தவறிவிட்டது.

பிரித்தானியா அரசானது, செப்டெம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் கைதான சந்தேகநபர்கள் சித்திரவதை செய்யப்பட்டது தொடர்பாக விசாரணைகளை நடத்த மறுத்துவிட்டு, நிபுணர்குழு அறிக்கையை வைத்துக் கொண்டும், சனல்-4 ஆவணப்படத்தை வைத்துக் கொண்டும் டிசம்பர் 31ம் திகதிக்குள் விசாரணை நடத்தத் தவறினால் அனைத்துலக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது என்றார்.

இதுபற்றியெல்லாம் இலண்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் கண்டு கொள்ளாதிருப்பது குறித்து அவர் கடும் கண்டனம் வெளியிட்டார்.

பின்லேடன் உள்ளிட்ட அல்கெய்டாவினரை அமெரிக்க சீல் படையினர் நீதிக்குப் புறம்பாக படுகொலை செய்த்து தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஒபாமா நிர்வாகம் இன்னமும் பதிலளிக்காத நிலையில்,இலங்கை மீது போர்க்குற்ற விசாரணைக்கு அமெரிக்கா அழைப்பு விடுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment