Saturday, August 20, 2011
பொதுமக்களின் அன்றாட வாழ்வை சீர்குழைத்து ஊரின் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் எவர் நடந்து கொண்டாலும் அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடி இன்போவிற்கு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,பாலமுனை கர்பலா பகுதிகளில் எந்தவித ஆதாரமும் அற்றவகையில் வெறும் வதந்தியாக பரவிய மர்ம மனிதன் பீதி தொடர்பில் நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று திரண்டு போலீசாரின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.இவ்வாறான சூழ்நிலைகளின் போது இவைகளை கையாள்வதற்கு அப்பகுதியின் பள்ளிவாயல்கள் ,ஊர் தலமைகள் ,அரசியல் பிரதிநிதிகள் இருக்கின்றபோது மக்கள் தேவையற்ற வதந்திகளை நம்பி வன்முறை செயல்களில் ஈடுபடுவதை முற்றாக தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறான செயல்கள் முஸ்லிம்களின் பாதுகாப்பு விடயத்தில் பாரிய அச்சுறுத்தலாக அமைவதோடு,ஏராளமான எதிர்ப்புகளுக்கு மத்தியில் பாலமுனை கர்பலா பகுதி மக்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு அரணை அகற்றுவதில் முன் நின்று செயற்படும் சக்திகளுக்கு இது இடம்கொடுக்கும் செயலாகவும் மாறக்கூடும்.
புனித நோன்பை முன்னிட்டு மக்கள் அமல்களில் ஈடுபடுகின்ற மற்றும் புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு நமது வியாபாரங்கள் மும்முரமாக நடக்கின்ற இவ்வேளையில் ,கடைகளை மூடுவதற்கோ அல்லது தொடர்ந்தும் பதட்ட நிலைமையை நீடிப்பதற்கோ நாம் இடம் கொடுக்கக் கூடாது.
அதேபோன்று,பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு எந்தவித பதிப்பும் ஏற்படாத வகையில் அவர்களின் முழுமையான பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என்று மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் என்ற அடிப்படையில் சகல பாதுகாப்பு தரப்பின் உயர் அதிக்காரிகளுக்கும் தான் பணிப்புரை விடுத்திருப்பதாகவும்,கைது செய்யப்பட்டிருப்பவர்களின் விடுதலை தொடர்பிலும் நான் உரிய அதிகாரிகளுடன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment