Pages

Sunday, May 19, 2019

பௌத்த வரலாற்றில் பல நிகழ்வுகளை சித்தரிக்கும் வெசாக் நோன்மதி தினம்! Photos

புத்தபெருமானின் பிறப்பு, புத்தர் என்ற நிலையை அடைந்தமை, பரிநிர்வாணம் போன்ற மூன்று நிகழ்வுகளும் இடம்பெற்றதாக கூறப்படும் பௌத்த வரலாற்றில் கூறப்படும் வெசாக் நோன்மதி தினம்  கொண்டாடப்படுகிறது.புத்தர் என்ற நிலையை அடைந்ததன் பின்னர், கிம்புல்வத்புர என்ற இடத்திற்கு விஜயம் செய்த மனித வர்க்கத்திற்கு வழிகாட்டிய நிகழ்வும் இதேபோன்ற ஒரு தினத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
 
புத்தபெருமானின் 03வது இலங்கை விஜயமும் வெசாக் தினத்தில் இடம்பெற்றிருக்கிறது. புத்தபெருமானின் புனித சிவனொளிபாதமலைக்கான விஜயமும் இதன் போது இடம்பெற்றிருக்கிறது.
மேலும், தீகவாபி உட்பட இலங்கையின் 12 இடங்களுக்கு புத்தபெருமான் விஜயம் செய்தமை, விஜயன் 500 தோழர்களுடன் இலங்கைக்கு வருகை தந்தமை,

துட்டகைமுனு மன்னன் ருவன்வெலி சாயவை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டிய நிகழ்வு
ஆகியவையும் இதேபோன்ற ஒரு தினத்தில் இடம்பெற்றிருக்கிறதாக வரலாறு கூறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment