Pages

Sunday, May 19, 2019

நாட்டில் புலிப் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு 10 வருடம் - நாட்டில் இராணுவத்தினரின் சேவை மீண்டும் மக்களால் உணரப்படுகின்றது: மஹிந்த ராஜபக்ஸ! Photos

நாட்டில் இராணுவத்தினரின் சேவையை பொருட்படுத்தாமல் இருந்ததன் விளைவை அண்மையில் கண்டுகொள்ள முடிந்தது என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.கண்டியில் நேற்று  புலிப் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு 10 வருட நிறைவையொட்டி இடம்பெற்ற இராணுவ வீரர்களின் நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில்  அவர் இதனைக் கூறியுள்ளார்.

இன்று இராணுவ வீரர்களின் பெறுமதி நாட்டு மக்களுக்கு மீண்டும் ஒரு முறை விளங்க ஆரம்பித்துள்ளது. இராணுவத்தினர் பெற்றுத் தந்த சுதந்திரத்தை சிலர் மறந்துள்ளனர். இதனால்தான், இராணுவ வீரர்களை சிறையில் அடைத்துள்ளனர். இது கவலைக்குரிய விடயமாகும்.

இராணுவத்தினர் மீது குற்றச்சாட்டைப் போட்டு, அவர்களின் வீரத்தை குறைத்து மதிப்பிட சிலர் முயற்சி எடுத்தனர். இராணுவ வீரர்களின் தேவைப்பாட்டை குறைத்து மதிப்பிட்டதன் விளைவை அண்மைய காலத்தில் நாட்டில் கண்டுகொள்ள முடிந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment