Pages

Monday, August 10, 2015

எதிர்வரும் பொதுத் தேர்தலில் TNA – 13 - 14 – UNP 98 – 104 - SLFP 87 - 93 - UNP கூடுதல் ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும்?: எக்கனோமி நெக்ஸ்ட்!

Monday, August 10, 2015
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியே கூடுதல் ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் என இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

நிகழ்தகவு அடிப்படையில் நடத்தப்பட்ட மூன்று வௌ;வேறு ஆய்வு முடிவுகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் ஐக்கிய தேசியக் கட்சியும் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்ள சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

225 மொத்த ஆசனங்களில் 113 ஆசனங்களை எந்தவொரு கட்சியும் பெற்றுக் கொள்ளக்4டிய சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 முதல் 14 வரையிலான ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக் கொள்ளும் எனவும், எந்தவொரு கட்சிக்கு ஆதரவளிக்காது கூட்டமைப்பு பாராளுமன்றில் சுயாதீனமாக இயங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் ஏதேனும் ஓர் கட்சி 106 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டால் ஆட்சியை அமைக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் முதல் தடiவாயக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் அரச ஊடகங்கள் அரச வளங்களைப் பயன்படுத்தி பிரச்சாரம் செய்ய முடியாத முடங்கிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இம்முறை ஐக்கிய தேசியக் கட்சிக்கு பிரச்சாரம் செய்வதற்காக பாரியளவில் தனியார்துறையினர் பணம் வழங்கியுள்ள போதிலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு பணம் கிடைக்கவில்லை என குறிப்பிடப்படுகிறது.

கம்பாஹா, களுத்துறை, திகாமடுல்ல, மாத்தறை, காலி, அம்பாந்தோட்டை, குருணாகல், அனுராதபுரம், மொனராகல், இரத்தினபுரி மற்றும் பொலனறுவை ஆகிய மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டி மொத்தமாக 93 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மறு புறத்தில் ஐக்கிய தேசியக் கட்சி 98 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மற்றுமொரு நிகழ்தகவு ஆய்வில் கொழும்பு, கம்பஹா, கண்டி, களுத்துறை, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை, அம்பாறை(திகாமடுல்ல), திகோணமலை, புத்தளம், பொலனறுவை, பதுளை மற்றும் கேகாலை உள்ளிட்ட மாவட்டங்களில் வெற்றியீட்டி 104 ஆசனங்களை ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியீட்டும் எனவும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 87 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வாக்களிப்போரின் எண்ணிக்கையும் இதில் மிக முக்கிய தாக்கத்தை செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்கனோமி நெக்ஸ்ட்

No comments:

Post a Comment