Pages

Monday, August 10, 2015

புலிகளுக்கு நிதி வழங்கவில்லை: மகிந்தராஜபக்ஷ!

புலிகளுக்கு தாம் நிதி வழங்கவில்லை என்று மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

தாம் அவ்வாறு நிதி வழங்கி இருந்தால் 3 வருடங்களில் விடுதலைப் புலிகளை அழித்திருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2005ம் ஆண்டு  புலிகளுக்கு பணத்தை வழங்கியதாலேயே மகிந்தராஜபக்ஷ தேர்தலில் வெற்றிப் பெற்றதாக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டு தொடர்பில் பதில் வழங்கும் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment