Pages

Saturday, August 8, 2015

வெள்­ளைக்­கொடி விவ­கா­ரத்தில் இரா­ணு­வத்தை காட்­டிக்­கொ­டுக்­கவே ஐக்­கிய தேசியக் கட்சி முயற்­சி: சுசில் பிரே­ம­ஜெ­யந்த!

Saturday, August 08, 2015 
வெள்­ளைக்­கொடி விவ­கா­ரத்தில் இரா­ணு­வத்தை காட்­டிக்­கொ­டுக்­கவே ஐக்­கிய தேசியக் கட்சி முயற்­சிக்­கின்­றது. நாட்­டையும் நாட்டை காப்­பாற்­றிய இரா­ணு­வத்­தையும் காப்­பாற்­று­வதில் இவர்கள் அக்­க­றை­யின்றி செயற்­ப­டு­வ­தாக ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச்­செ­ய­லாளர் சுசில் பிரே­ம­ஜெ­யந்த தெரி­வித்தார்.
 
ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைமை அலு­வ­ல­கத்தில் நடை­பெற்­றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.அவர் மேலும் கூறு­கையில், வெள்­ளைக்­கொடி விவ­கா­ரத்தில் இரா­ணு­வத்தின் மீது சுமத்­தப்­பட்­டி­ருக்கும் குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் புதிய அர­சாங்கம் பொறுப்­பில்­லாது செயற்­ப­டு­கின்­றது. இந்த விவ­கா­ரத்தில் இரா­ணு­வத்தை காப்­பாற்­றாது சர்­வ­தேச விசா­ர­ணையில் சிக்­க­வைக்­கவே அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. அதேபோல் ஐக்­கிய நாடு­களின் அறிக்­கையின் இர­க­சி­யங்கள் கசிந்­துள்­ளன. இதிலும் இலங்கை விவ­கா­ரத்தில் இரா­ணு­வத்தின் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளமை வெளிப்­பட்­டுள்­ளது.
 
இலங்கை மீதான போர்க்­குற்ற விசா­ர­ணை­களை மேற்­கோள்­ளு­மாறு ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­விடம் பல அறிக்­கைகள் தொடர்ச்­சி­யாக முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. சனல் 4நிறு­வ­னத்தின் ஊடகவியலாளர் கெலும் மெக்ரே தொடர்ச்­சி­யாக ஆவ­ணங்­களை உரு­வாக்கி ஐ.நா ஆணைக்­கு­ழு­விடம் வழங்­கிக்­கொண்­டி­ருக்­கின்றார்.
 
ஆனால் இவர்கள் முன்­வைக்கும் ஆவ­ணங்கள் அனைத்தும் பொய்­யா­னதே. நாட்டில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த திட்­ட­மிட்டு இவர்கள் முயற்­சித்து வரு­கின்­றனர். யுத்த குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் இவர்கள் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்கும் புகைப்­ப­டங்­களும் உண்­மைக்கு முர­ணா­ன­தாகும். கெலும் மெக்ரே கடந்த 2013 ஆம் ஆண்டு இலங்­கைக்கு வந்­தி­ருந்த போதும் அவர் ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆத­ரவில் தான் செயற்­பட்டார். ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பு­களில் தான் கலந்து கொண்­டி­ருந்தார். ஆகவே இவர்கள் அனை­வரும் பக்­க­சார்­பான வகையில் தான் செயற்­ப­டு­கின்­றனர்.
 
ஐக்­கிய தேசி­யக கட்­சிக்கும் அவர்­க­ளுடன் புதி­தாக கூட்டு சேந்­தி­ருக்கும் நபர்­க­ளுக்கும் நாட்­டையும், நாட்டை காப்­பாற்­றிய இரா­ணுவ வீரர்­க­ளையும் காப்­பாற்றும் நோக்கம் இல்லை. மாறாக நாட்­டையும், இரா­ணு­வத்­தையும் காட்­டிக்­கொ­டுக்­கவே முயற்­சிக்­கின்­றனர் என்றார்.

No comments:

Post a Comment