Saturday, August 08, 2015
வெள்ளைக்கொடி விவகாரத்தில் இராணுவத்தை காட்டிக்கொடுக்கவே ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிக்கின்றது. நாட்டையும் நாட்டை காப்பாற்றிய இராணுவத்தையும் காப்பாற்றுவதில் இவர்கள் அக்கறையின்றி செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் கூறுகையில், வெள்ளைக்கொடி விவகாரத்தில் இராணுவத்தின் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் புதிய அரசாங்கம் பொறுப்பில்லாது செயற்படுகின்றது. இந்த விவகாரத்தில் இராணுவத்தை காப்பாற்றாது சர்வதேச விசாரணையில் சிக்கவைக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது. அதேபோல் ஐக்கிய நாடுகளின் அறிக்கையின் இரகசியங்கள் கசிந்துள்ளன. இதிலும் இலங்கை விவகாரத்தில் இராணுவத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை வெளிப்பட்டுள்ளது.

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணைகளை மேற்கோள்ளுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் பல அறிக்கைகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்றன. சனல் 4நிறுவனத்தின் ஊடகவியலாளர் கெலும் மெக்ரே தொடர்ச்சியாக ஆவணங்களை உருவாக்கி ஐ.நா ஆணைக்குழுவிடம் வழங்கிக்கொண்டிருக்கின்றார்.
ஆனால் இவர்கள் முன்வைக்கும் ஆவணங்கள் அனைத்தும் பொய்யானதே. நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த திட்டமிட்டு இவர்கள் முயற்சித்து வருகின்றனர். யுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் இவர்கள் வெளிப்படுத்தியிருக்கும் புகைப்படங்களும் உண்மைக்கு முரணானதாகும். கெலும் மெக்ரே கடந்த 2013 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்திருந்த போதும் அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவில் தான் செயற்பட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்புகளில் தான் கலந்து கொண்டிருந்தார். ஆகவே இவர்கள் அனைவரும் பக்கசார்பான வகையில் தான் செயற்படுகின்றனர்.
ஐக்கிய தேசியக கட்சிக்கும் அவர்களுடன் புதிதாக கூட்டு சேந்திருக்கும் நபர்களுக்கும் நாட்டையும், நாட்டை காப்பாற்றிய இராணுவ வீரர்களையும் காப்பாற்றும் நோக்கம் இல்லை. மாறாக நாட்டையும், இராணுவத்தையும் காட்டிக்கொடுக்கவே முயற்சிக்கின்றனர் என்றார்.

No comments:
Post a Comment