மிஸ்டர் கிZன் (Mister Clean) என்று பொது வாழ்க்கையில் நாடகமாடி நாட்டு மக்களை ஏமாற்றி வந்த எதிர்க்கட்சியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அந்தளவுக்கு நேர்மையான அப்பட்டமான வெள்ளை உள்ளம் கொண்ட மனிதர் அல்ல என்ற உண்மை இப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது.
மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன 2013ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்காரவின் மகன் அசேல வைத்தியலங்கார தனது மனைவியுடனும் இன்னுமொரு இளம் கணவன் மனைவி ஜோடியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாசிக்குடாவில் இருக்கும் மாலு மாலு என்ற சுற்றுலா விடுதிக்கு அருகில் கடலில் நீராடி மகிழ்ந்து கொண்டிருந்தார்.
அப்போது பிற்பகல் 3.30 மணியளவில் அங்கு வந்த இளைஞர்களில் ஒருவர் மற்றவர் நிர்வாணமாக
இருக்கும் காட்சியை படம் எடுத்திருக்கின்றார்.
அவர்கள் பெண்களின் பக்கத்துக்கு வந்து தரக்குறைவாக நடந்து கொண்டு பெண்களையும் வீடியோ படம் எடுக்க எத்தனித்த போது ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்காரவின் மகன் அசேலவை தாக்கி காயப்படுத்தி இருக்கிறார்.
இதற்கான வைத்திய ஆதாரங்களும் இருக்கின்றன. குற்றம் இழைத்த தனது மகன் தஹாமை பொலிஸ் விசாரணைக்காக பல மணித்தியாலங்கள் தடுத்து வைத்திருந்ததை கேள்விப்பட்ட, நேர்மையான மனிதரைப் போன்று நடந்து கொள்ளும் மைத்திரிபால சிறிசேன ஆத்திரம் அடைந்த நிலையில் பொலிஸ் நிலையத்துக்கு வந்து சட்ட விரோதமாக தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மகனை மீட்டெடுத்து சென்றிருக்கிறார்.
அதையடுத்து தனது மகனை தடுத்து வைத்திருந்த ஒரே குற்றத்திற்காக பிரதி பொலிஸ் மா
அதிபரைத் தண்டிக்கும் எண்ணத்துடன் அவரை கொழும்பு மாவட்டத்திற்கு மைத்திரிபால
சிறிசேன தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இடமாற்றம் செய்தார்.
இவ்விதம் நல்லவரைப் போன்று பொது வாழ்க்கையில் நடந்து கொள்ளும் மைத்திரிபால சிறிசேனவின் வாழ்க்கையின் மறுபக்கம் இப்போது மக்களுக்கு தெரியவந்துள்ளது.
சந்திரிகா சீமாட்டியின் மிக நெருக்கமான கூட்டாளியாக இருக்கும் மைத்திரிபால சிறிசேன
எவ்விதம் ஒரு நேர்மையான மனிதராகவோ அரசியல்வாதியாகவோ இருந்திருக்க முடியும் என்று
மக்கள் இப்போது பகிரங்கமாக குரல் எழுப்புகிறார்கள்.
திருப்பதி வெங்கடேஷ்வரரின் அனுக்கிரகத்துடன்
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிக் கொடி நாட்டுவார்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திருப்பதி வெங்கடேஷ்வரர் ஆலயத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள ஒரு தேசத் தலைவராக விளங்குகிறார். அவர் தனது ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்களை முடுக்கி விடுவதற்கு முன்னர் தெய்வ ஆசியை வேண்டி இவ்வாலயத்துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலையில் சென்று அங்கு இடம்பெற்ற விசேட பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டார்.
அஞ்சா நெஞ்சம் படைத்த மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில்
தமக்கு எதிராக இருக்கும் எதிர்ப்புக்களையும் பொருட்படுத்தாமல் திருப்பதி
வெங்கடேஷ்வரரின் காலடியை வணங்கி அவரது அனுக்கிரகத்தை பெற்று மறுதினம் நாடு
திரும்பினார்.
இந்த திருப்பதி வெங்கடேஷ்வரர் ஆலயத்துக்கு சென்று வழிபட்டதன் மூலம் ஜனாதிபதி எதிர்வரும் ஜனவரி 8ம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிக் கொடி நாட்டி மீண்டும் அடுத்த பல்லாண்டுகளுக்கு தெய்வ கிருபையுடன் தொடர்ந்தும் நல்லாட்சியை மேற்கொண்டு நாட்டு மக்களுக்கு மனநிறைவைத் தரும் வளமான எதிர்காலத்தை பெற்றுக் கொடுப்பார் என்று நம் நாட்டு மக்களும் மதத் தலைவர்களும் சமூகத் தலைவர்களும் ஜனாதிபதியை வாழ்த்தி நல்லாசி கூறுகிறார்கள்.
திருப்பதி ஆலயம் உலகில் உள்ள தெய்வத்தலங்களில் மிகவும் செல்வம் மிக்க ஓர் ஆலயமாக விளங்குகின்றது. இங்கு நாளாந்தம் 50 ஆயிரம் மக்கள் சென்று தெய்வ தரிசனையை பெறுகிறார்கள். இதனடிப்படையில் வருடத்துக்கு சுமார் 19 மில்லியன் பக்தர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து திருப்பதி வெங்கடேஷ்வரரை தரிசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கான மயிலாட கண்டிருந்த வான்கோழி...
இந்தியாவில் சமீபத்தில் இடம் பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிவாகை சூடி பிரதம
மந்திரி பதவியை ஏற்று சாதனை படைத்த நரேந்திர மோடியைப் பார்த்து தானும் ஒரு மோடி
என்ற நினைப் பில் மோடி அணிவது போன்ற உடைகளை மைத்திரிபால சிறிசேன அணிய
ஆரம்பித்துள்ளார்.
ஒளவைப் பிராட்டியார் கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானு மதுவாக பாவித்து தானும் தன் பொல்லா சிறகை விரித்தாடினாற் போல் கல்லாதான் கற்ற கதி என்ற உண்மையான கூற்றுக்கு அமைய மைத்திரிபால சிறிசேன என்ற வான்கோழி நரேந்திர மோடி என்ற அழகிய ஆண்மயிலைப் போன்று எவ்வளவுதான் தன் உடை மோஸ்தர்களை மாற்றிக் கொண்டாலும் மைத்திரிபால சிறிசேனவுக்கு என்றுமே ஒரு நரேந்திர மோடியாக மாற முடியாது என்று எங்கள் நாட்டின் அரசியல் அவதானிகள் மைத்திரிபால சிறிசேனவைப் பார்த்து கிண்டல் செய்யும் அளவுக்கு அவர் இன்று தரக்குறைவாக நடந்து கொள்கிறார்.
மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்க அமெரிக்கா நிறைவேற்றிய சதித்திட்டம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பதவியிலிருந்து அகற்றிவிட வேண்டும் என்ற தன்னுடைய குரோத உணர்வை நிறை வேற்றும் சதித்திட்டத்தை அமெரிக்க அரசாங்கம் இன்றோ நேற்றோ ஆரம்பிக்கவில்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவுடன் நெருக் கமாகி, ஆசியாவில் சீனாவுக்கு
முக்கியத்துவம் அளிப்பதற்கு எடுத்துவரும் நல் லெண்ண முயற்சிகளை முறியடிப்பதும் இந்த
சதித்திட்டத்துக்கான இன்னுமொரு காரணமாகும். இந்த சதித்திட்டத்தை தீட்டி மக்களின்
கண்ணில் மண் தூவிவிட்டு மஹிந்த ராஜபக்ஷவை தங்கள் பணப் பலத்தைப் பார்த்து பேராசையில்
வாலாட்டி எதையும் செய்யக்கூடிய ஒரு பொம்மையை ஜனாதிபதி பதவியில் அமர்த்தும்
எண்ணத்துடன்தான் மைத்திரிபால சிறிசேனவுக்கு அமெரிக்க அரசாங்கம் ஹவர்க் (சிarvarனீ)
பல்கலைக்கழகத்தின் சுகாதார தலைமைத்துவ கெளரவ விருதை 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில்
வழங்கியது. இவ்விதம் அமெரிக்கா வீசிய வலையில் மைத் திரிபால சிறிசேன சிக்கிக்கொண்டு,
இன்று தன்னுடைய சுயகெளரவத்தை இழந்து ஒரு அவமான சின்னமாக மாறியுள்ளார்.
அமெரிக்க அரசாங்கமே ஹவர்க் (சிarvarனீ) பல்கலைக் கழகத்துக்கு நிதி உதவியை வழங்கி அதன் மூலம் தன்னுடைய ஜனநாயக விரோத சதித்திட்டங்களை நீதியான சட்டபூர்வமான செயற்பாடுகளை போன்று வெற்றிகரமாக நிறைவேற்றியது. இலங்கையில் மது அருந்துதல், புகைத்தலுக்கு எதிரான செயற்பாடுகளை மைத்திரிபால சிறிசேன வெற்றிகரமாக நிறைவேற்றினார் என்றும் அவர் தேசிய போதைவஸ்து தடைக்கொள்கையை தயாரிப்பதில் முன்நின்று உழைத்தார் என்றும் ஹவர்க் (சிarvarனீ) பல்கலைக்கழகம் மைத்திரிபால சிறிசேனவை பாராட்டி இந்த கெளரவ விருதை வழங்கியது.
கையாலாகாத மைத்திரிபால சிறிசேன போன்றதொரு வேட்பாளரை தங்களின் கோடானு கோடி டொலர்களை அள்ளி வீசி ஜனாதிபதி பதவியில் அமர்த்துவதற்கு முன்னோடியாக உலக நாடுகளின் அமைப்பு மற்றும் மேற்குலக தூதரகத்தின் ஊடாக டொலர் நோட்டுக்களை வீசி எறிந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களையும் சந்திரிகா சீமாட்டியையும் சரத் பொன்சேகா போன்ற மக்கள் ஆதரவு பூச்சிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் தலைவர்களையும் இந்த நிறுவனம் இந்த சதித்திட்டத்தில் கையாட்களாக சேர்த்துள்ளதாக அரசியல் அவதானிகள் வேதனைப்படுகிறார்கள்.
1931ஆம் ஆண்டில் முதன் முதலில் ஆசிய நாடுகளில் இலங்கையிலேயே சர்வஜன வாக்குரிமை ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அவுஸ்திரேலியா போன்ற நாடுகளையும் இணைத்துப் பார்க்கின்ற போது சர்வஜன வாக்குரிமையை இலங்கைக்கு முன்னர் பெற்ற ஒரே நாடாக நியூசிலாந்து மாத்திரமே இருந்து வருகின்றது.
பிரிட்டனின் வெஸ்ட் மினிஸ்ரர் பாராளுமன்ற ஜனநாயகம் தழைத்தோங்கி வரும் எங்கள்
நாட்டில் அராஜக நிலையை ஏற்படுத்தி தங்களுடைய எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக
அமெரிக்கா இவ்விதம் குரோத உணர்வுடன் சதித்திட்டங்களை வகுத்து வருவதாக அரசியல்
அவதானிகள் மேலும் கூறுகிறார்கள்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை
மலேசியாவின் முன்னாள் பிரதமர் பாராட்டினார்
இதேவேளையில் சிங்கப்பூர் தேசத்தை மிகக் குறுகிய காலத்தில் கட்டியெழுப்பிய அந்நாட்டின் முதல் பிரதம மந்திரி லீகுவான்யூ போன்று மலேஷியாவின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த அந்நாட்டின் முன்னாள் பிரதம மந்திரி மஹதீர் முஹம்மட் ஜனாதிபதியையும் இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார கொள்கையை பாராட்டியுள்ளார்.
தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு இங்கு வந்திருக்கும் அவர் அலரி மாளிகையில்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த பின்னரே இந்த பாராட்டை தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் தனது நல்லாட்சியை மேலும் பல்லாண்டுகளுக்கு நடத்தினால்தான் எங்கள் நாட்டை சர்வதேச சக்திகள் திட்டமிடும் பேரழிவை தவிர்க்க முடியும். அதனால் நானும் என்னை ஆதரிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்த தேர்தலில் முழு மூச்சுடன் ஆதரிப்போம் என்று சங்கைக்குரிய தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியின் பொது வேட்பாளர் இரட்டை நாக்குடையவர் போன்று முதல் நாள் தெரிவித்ததற்கு எதிர்மாறான கருத்தை மறுநாள் கூறுகின்றார். கொழும்பு, கங்காராமய விகாரையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற மத நிகழ்ச்சியில் புனித சின்னத்தை தலையில் ஏந்திக்கொண்டிருந்த மைத்திரிபால சிறிசேன தான் அரசாங்கத்தைவிட்டு வெளியேறமாட்டேன் ஜனாதிபதியை ஆதரிப்பேன் என்று உறுதியளித்தார்.
மறுநாள் அவர் பல்டி அடித்து எதிரணியில் சேர்ந்துவிட்டார். இவ்விதம் 24 மணித்தியாலயங்களுக்குள் முழுமையாக தனது போக்கை மாற்றிக்கொண்டதன் மூலம் மைத்திரிபால சிறிசேன பெளத்த மதத்தின் புனித சின்னத்துக்கே அவமதிப்பை ஏற்படுத்திவிட்டார் என்று சங்கைக்குரிய மேதானந்த தேரர் கண்டனம் தெரிவித்தார்.
இதேவேளையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதில்லை என்று சில தினங்களுக்கு முன்னர் பகிரங்கமாக அறிவித்த ஜாதிக ஹெல உறுமயவின் பிரதிப் பொதுச் செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான உதய கமன்பில கடந்த வியாழக்கிழமை மீண்டும் அரசாங்கக் கட்சியில் சேர்ந்து ஜனாதிபதியை ஆதரிக்கப் போவதாக அறிவித்துள்ளார். அவரது வழியில் அக்கட்சியைச் சேர்ந்த சம்பிக ரணவக்கவும் அரசாங்கக் கட்சியில் சேர்ந்து விடலாம் என்று அரசியல் அவதானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.
2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளினால் ஏமாற்றப்பட்டு அவை தெரிவித்த ஆசை வார்த்தைகளை நம்பி பலிக்கடாவாக மாற்றப்பட்டு படுதோல்வி அடைந்த சரத் பொன்சேகா அடைந்த தோல்வியை விட மைத்திரிபால சிறிசேன இந்த தடவை மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்று மண் கவ்வுவதன் மூலம் ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா சீமாட்டி ஆகியோரின் உண்மையான முகத்தை மக்களுக்கு காட்டுவதற்காக இவ்விருவரின் மாய முகமூடி மக்களால் கிழித்தெறியப்படும் என்று அரசியல் அவதானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா சீமாட்டியும் ரணில் விக்கிரமசிங்கவும் இன்று சர்வதேசத்தின் கைக்கூலிகளாக செயற்பட்டுவருவதாக தேசியப்பற்றுள்ள தேசிய இயக்கம், அவர்கள் மீது பகிரங்கமான கண்டனத்தை வெளியிட்டுள்ளது. அதுபோலவே நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக கடந்த காலங்களில் குரல்கொடுத்து வந்த ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜே.வி.பி போன்ற கட்சிகளும் வெளிநாட்டு டொலருக்கு அடிமையாகி இருப்பதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்க தலைவர் குணதாஸ அமரசேகர குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைய செய்து சர்வதேச நீதிமன்றத்தில் அவரை நிறுத்துவதற்காகவே சர்வதேசம் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவின் பின்னணியில் இருந்து செயற்பட்டு வருகின்றது என்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்க தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தோல்வியை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க தங்கள் கட்சியின் பொதுவேட்பாளர் வெற்றி பெற்றதும் இரு வருடங்களுக்கு தேசிய அரசாங்கத்தை அமைத்து சர்வகட்சி ஆட்சியின் கீழ் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்துவேன் என்று இந்நாட்டு மக்களை ஏமாற்றும் இன்னுமொரு தேர்தல் குண்டொன்றைப் போட்டுள்ளார்.
2001ஆம் ஆண்டளவில் குறுகிய காலத்திற்கு தான் பிரதம மந்திரியாக இருந்த போது ரணில் விக்கிரமசிங்க நோர்வே போன்ற நாடுகளின் பணப் பலத்துக்கு அடிமையாகி நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை எல்.ரி.ரி.ஈ இயக்கத்துக்கு சட்டபூர்வமாக ஒப்பந்தம் செய்து தாரைவார்த்து கொடுக்க முன்வந்தார்.
இவ்விதம் தேசத்திற்கு துரோகம் செய்வதற்கும் அஞ்சாத ரணில் விக்கிரமசிங்க இன்று
ஒன்றும் தெரியாத சின்ன பாப்பாவைப் போன்று இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பேன் என்று
கூறுவதன் மூலம் இந்நாட்டு மக்களின் எதிர்ப்பிற்கும் ஏளனத்திற்கும்
இலக்காகியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிக்கொடி நாட்டியவுடன் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வலது கையாகவும் இடது கையாகவும் இருக்கும் ரணில் விக்கிரமசிங்கவும் சந்திரிகா சீமாட்டியும் நிச்சயம் மண் கவ்வி அரசியலிலிருந்து நிரந்தரமாக வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்று அரசியல் அவதானிகள் கூறுகின்றார்கள்.

No comments:
Post a Comment