Pages

Sunday, December 14, 2014

இலங்கை ஜனாதிபதி தேர்தலின் போது ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்களை வரவழைப்பது தொடர்பான கோரிக்கை நிராகரிப்பு!

Sunday, December 14, 2014
இலங்கை::இலங்கையின் ஜனாதிபதி தேர்தலின் போது ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்களை வரவழைப்பது தொடர்பான கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது என  தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
 
ஐரோப்பிய ஒன்றியத்தில் இலங்கை பிரதிநிதித்துவம் கொண்டிருக்கவில்லை.எனினும் பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் அங்கத்துவத்தை கொண்டிருக்கிறது.
 
எனவேதான் பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பாளர்களை கண்காணிப்புக்கு அழைத்துள்ளதாக ஆணையாளர் கூறினார்.
 
இந்தநிலையில் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்களை அழைப்பதற்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நான்கு வேட்பாளர்கள் விருப்பம் கொண்டிருக்கவில்லை என்றும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
 

No comments:

Post a Comment