Pages

Sunday, December 21, 2014

காதோடு காதாக...* பதில் கூற திணறும் மைத்திரி...* ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள்...* இவர்களுக்குத்தான் அந்த விருது..* உண்மைகளை வெளிப்படுத்தும் பொய்கள்!!.


Sunday, December 21, 2014
இலங்கை* பதில் கூற திணறும் மைத்திரி
 வடக்கு கிழக்கு இணைப்பு, வட மாகாண சபைக்கு காணி, பொலிஸ் அதிகாரம் வழங்குவது தொடர்பாக எதிரணி பொது வேட்பாளரின் நிலைப்பாடு என்ன என்பதைத் தெரியப்படுத்துமாறு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் விடுத்த கேள்விக்கு பதிலளிக்க முடியாது திணறுகிறாராம் மைத்திரிபால. ஒருவேளை சம்பிகவும் அத்துரிலியே ரத்ன தேரரும் ஒன்றாக வெளிநாடு சென்றால் பதில் கூறுவாரோ?

* ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள்

தமது மேடைகளுக்கு தாமே தீ வைத்துவிட்டு அடுத்தவர் மீது பழி போடுவதும் ஒரு தேர்தல் தந்திரம்தான். இப்படிச் செய்தால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடிக்கலாம் என்பது எதிரணியின் கனவு. ஒன்று ஊடகங்களில் இலவச பிரசாரம் மற்றது மக்களது அனுதாபம். ஆனால் இந்தப் பொய்களை நம்ப மக்கள் இப்போது தயாரில்லை.


* இவர்களுக்குத்தான் அந்த விருது


யாழ்ப்பாண ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நடந்த கை கலப்பை தொலைக்காட்சிகளில் பார்த்தவர்களுக்கு இருதரப்புமே அதில் ஈடுபட்டமை மிகத் தெளிவாகத் தெரிந்திருக்கும். ஆனால் எமது தமிழ் ஊடகங்களோ தமிழ்க் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு மட்டுமே அடி விழுந்தது போல பிரசாரம் செய்தன. நடுநிலை, பக்கச் சார்பின்மைக்கான விருது இவர்களுக்குத்தான் வழங்க வேண்டும்.

* உண்மைகளை வெளிப்படுத்தும் பொய்கள்


சிங்கப்பூரில் புலம் பெயர் புலிகளுடன் சூழ்ச்சித் திட்டம் நடத்தப்பட்டது என்று அரச தரப்பு கூறிய நாளிலிருந்து அதனை மறுப்பதற்காக எதிரணியிலுள்ள பலரும் தெரிவித்துவரும் மாறுபட்ட கருத்துக்களே அவர்கள் செய்த சதியை தெளிவுபடுத்தியுள்ளது. உண்மையை மறைக்க அவர்கள் ஒவ்வொருவரும் கூறிவரும் பொய்களால் இன்னும் பல உண்மைகள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment