Sunday, December 21, 2014
இலங்கை::ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து இன்று சனிக்கிழமை ஐந்து பிரச்சாரக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக எதிர்க் கட்சிகளின் கூட்டணி அறிவித்துள்ளது.
மதவரச்சி, ஹொரவப்பொத்தான, கலாவெவ, தம்புள்ள மற்றும் குருணாகல் ஆகிய பிரதேசங்களில் இந்தக் கூட்டங்கள் நடைபெறவுள்ளதாகவும் அக்கூட்டணி மேலும் தெரிவித்துள்ளது
மஹிந்தவை ஆதரித்து இன்று 3 பிரச்சாரக் கூட்டங்கள்
ஜனாதிபதித் தேர்தலுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஆதரித்து நடாத்தப்படும் அடுத்த பிரச்சாரக் கூட்டம் இன்று மூன்று இடங்களில் நடைபெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது.
ரத்தொட்ட, லக்கல மற்றும் தம்புள்ள ஆகிய பிரதேசங்களில் இந்தக் கூட்டங்கள் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மைத்திரிபாலவுக்காக ஜாதிக ஹெல உறுமய 1000 கூட்டங்களை நடத்துகிறது
பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் ஜாதிக ஹெல உறுமய நாடளாவிய ரீதியில் சுமார் 1000 கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது.
ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிசாந்தஸ்ரீ வர்ணசிங்க, இது தொடர்பில் கூறும்போது பெண்கள், இளைஞர்கள் மற்றும் தொழில் கொள்வோரை இலக்கு வைத்து இந்த பிரசாரம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்தார்.
தமது கூட்டங்கள் பெரும்பாலும் விகாரைகளில் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment