Tuesday, December 16, 2014

பலத்த சவால்களுக்கு மத்தியிலும் மறுபடியும் வெல்லப்போவது ஜனாதிபதிமகிந்த ராஜபக்ச அவர்களே: மகிந்த ராஜபக்ச அவர்களின் வெற்றியில் தமிழ் மக்களும் பங்காளர்களாக இருக்க வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, December 16, 2014
இலங்கை::மறுபடியும் ஒரு ஜனாதிபதித்தேர்தல் எம்மைத் தேடிவந்திருக்கிறது. எங்கள் வாக்குகளின் பலத்தால் அதிகாரத்தில் இருக்கப் போகின்றவர்களுடன் அரசியல் பேரம் பேசும் சந்தர்ப்பத்தை நாம் சரிவரப் பயன்படுத்தவேண்டும்.

மாறி, மாறி ஆட்சிக்கு வந்த அனைத்து ஆட்சியாளர்களும் அழிவு யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவரும் நோக்கத்துடனேயே செயற்பட்டார்கள். ஆனாலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் காலத்திலேயே யுத்தம் முடிவிற்கு வந்தது. இன்று அழிவுகள் இங்கில்லை. அச்சம் எங்குமில்லை!

ஒவ்வொரு ஆட்சிகளின் போதும் அரசியல் தீர்விற்குக் கிடைத்த வாய்ப்புக்களை சகதமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கத்தலைமைகள் சரிவரப் பயன்படுத்த மறுத்ததாலேயே இங்கு அழிவுகளேந டந்தன.

இதனால், இன்றைய அமைதிச் சூழலை உருவாக்க தமிழ் பேசும் மக்களும் தமது விலைமதிப்பற்ற உயிர்களை அர்ப்பணம் செய்திருக்கிறார்கள்.

ஆனாலும். மலர்ந்திருக்கும் சமாதான சூழலில் எமது வரலாற்று வாழ்விடங்களை தூக்கிநிறுத்தி, அழிவுகளில் இருந்து நாம் மீண்டெழும் திட்டங்கள் எமது இணக்க அரசியல் வழிமுறைகளுக்கூடாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனது ஜனநாயக வழி அரசியல் பயணத்தில் முன்னாள் ஜனாதிபதிகளான பிரேமதாச, டி.பி விஜயதுங்க, சந்திரிகாகுமாரணதுங்க, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் இன்றைய ஜனாதிபதிமகிந்த ராஜபக்ச என்று பலரையும் நான் சந்தித்திருக்கின்றேன், பழகியுமிருக்கின்றேன். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் குறித்தும்,அதற்கான அரசியல் தீர்வு குறித்தும் வாதாடியும் வந்திருக்கின்றேன்.

முன்பிருந்த எந்தவொரு ஆட்சியாளர்களுக்கும் அதை நடைமுறைப்படுத்தும் துணிச்சலும் இருந்திருக்கவில்லை. விருப்பமும் இருந்திருக்கவில்லை.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களே எமது கோரிக்கையினை ஏற்றுக்கொண்டிருந்தார். கிழக்கிலும், வடக்கிலும் மாகாணசபைத் தேர்தல்களை நடத்தியதன் மூலம்  தீர்வு முயற்சியை முன்னெடுக்க ஆரம்பித்திருக்கிறார்.

துரதிர்ஸ்டவசமாக வடமாகாண சபை அதிகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைகளில் கிடைத்திருப்பதால், அரசியல் தீர்விற்கான நடைமுறைச் சாத்தியமான பயணம் கூட அவர்களாலேயே தடைப்பட்டுநிற்கின்றது. அதற்குக் காரணம், கூட்டமைப்பினருக்கு பிரச்சினைகள் தொடர்ந்திருக்கவேண்டும். அதுவே அவர்களின் இலக்காகவுள்ளது.

ஆட்சிமாற்றம் இங்குநடந்தாலும் என்னதான் நடக்கப்போகிறது?  அவர்கள்  இது வரையிலான அரசியல் தீர்வுமுயற்சிகளை புறந்தள்ளி, இதுவரை எடுத்த முயற்சிகளைக் கைவிட்டு, மீண்டும் "அ"வில் தொடங்கி ஏதோ புதிதாக செய்யப் போவதாகச் சொல்வார்கள். அது"பழையகுருடி கதவைத் திறவடி"என்றகதையாகத்தான் இருக்கும்.

இன்று யாருக்கேனும் வாக்களிக்குமாறு கூறினாலும்,தேர்தல் தேனிலவு முடிந்ததும் நாளை அவர்களையே சிங்களத் தலைவர்கள் எமக்குஎதையும் தரமாட்டார்கள்"என்று கூறி,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மறுபடியும் தமது வழமையான போலிஎதிர்ப்பு அரசியலால் அரசியல் தீர்வுமுயற்சிகளை முடக்கிவைக்கவே செய்வார்கள்.

எதிரணியினர், ஜனாதிபதிமகிந்த ராஜபக்ச அவர்கள் முன்னெடுத்துவரும் இதே திட்டங்களை முன்னெடுக்கப் போவதாக வாக்குறுதி அளித்தாலும், அதை நடைமுறைப்படுத்தும் ஆளுமையும், துணிச்சலும் அவர்களுக்கு இல்லை. இது கடந்தகாலங்களில் நான் அவர்களிடம் கண்டுகொண்ட அனுபவங்கள்.

பலத்த சவால்களுக்கு மத்தியிலும் மறுபடியும் வெல்லப்போவது ஜனாதிபதிமகிந்த ராஜபக்ச அவர்களே என்பது தென்னிலங்கையின் நிலவரம். தமிழ் பேசும் மக்களின் வாக்குகளே ஜனாதிபதி அவர்களின் வெற்றிக்குபலம் சேர்க்கவும் போகின்றது.

இதில் ஆளுமை மிக்க,துணிச்சல் மிக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்குதமிழ் பேசும் மக்கள் மேலதிக ஆதரவை வழங்குவதன் மூலம், எமதுஅரசியல் கோரிக்கைகளை முன்வைத்துநாம் ஜனாதிபதி அவர்களுடன் பேரம் பேச இதுவேசந்தர்ப்பம். இதன் மூலம் அரசியல் பேரம் பேசும் மதிநுட்பசிந்தனையால் எமதுஅரசியல் இலக்குநோக்கியும் நாம் தொடர்ந்தும் செல்லமுடியும்.

அரசியலுரிமை தொடக்கம் அபிவிருத்திவரை நாம் கோரிக்கை வைத்து,பேரம் பேச வேண்டியது மறுபடியும் ஆட்சிக்கு வரப்போகின்ற இன்றைய

ஜனாதிபதி அவர்களுடன் மட்டுமே. ஏனென்றால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சஅவர்கள் ஒரு யதார்த்தவாதி, வெளிப்படைத்தன்மையானவர். ஆளுமைமிக்கவர், துணிச்சலானவர்.

எதிரணியினரிடம் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பான உறுதியான, வெளிப்படையானதீர்வுகள் எவையுமில்லை. தேர்தலுக்கு இன்னும் சிலநாட்களே இருக்கின்ற நிலையிலும் அவர்கள் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் பற்றிவாய் திறக்கவில்லை.

மாறாக கபடத்தனமாக திரைமறைவுப் பேச்சுக்களையே நடத்துகின்றனர். மக்களை ஏமாற்ற தமிழ் அரசியல்வாதிகளுடன் பணப் பேரம் பேசுகின்றனர். குறுகிய அரசியல் நோக்கங்களுடனேயே போட்டிக் களத்தில் குதித்திருக்கின்றார்கள். அவர்களிடம் தூரநோக்குச் சிந்தனை இல்லை.

உண்டு என்றால் அது உண்டு, இல்லை என்றால் அது இல்லை"என்பதுபோல் தன் கருத்தை வெளிப்படையாகக் கூற முடிந்த, துணிச்சல் மிக்க, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சஅவர்களின் வெற்றியில் தமிழ் மக்களும் பங்காளர்களாக இருக்க வேண்டும். இல்லை என்பது இல்லை. தமிழ் மக்களுக்கு சகலதும் உண்டு என்பதை நாம் உருவாக்க இதுவே அரிய சந்தர்ப்பம்.

இன்று எமதுமக்களின் அரசியலுரிமைக்கு எதிரானவர்கள் எதிரணியில் இணைந்துவிட்டனர். அவர்களைக் கட்டுப்படுத்தும் துணிச்சலும், ஆளுமையும் எதிரணியினருக்கு இல்லை என்பதே நான் கண்டஅனுபவம்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை மறுபடியும் ஆட்சியதிகாரத்தில்
உட்காரவைப்பது, எமது மக்களாகிய உங்களது உரிமைப்பயணத்தைநாம் விட்டகுறையில் இருந்துதொடர்ந்தும் முன்னெடுப்பதற்காகவே.

இன்றைய நீடித்த ஆட்சியிலேயே எமதுமக்களின் சகல உரிமைகளுக்குமான தீர்வுகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு முடிவிற்குக் கொண்டுவரப்படும்.

இதுவே உண்மை! உறுதி!! நம்பிக்கை!!! இதற்கு நானே பொறுப்பு.

இங்குநடந்ததும், நடந்துகொண்டிருப்பதும், இனிநடக்கப் போவதும் நான்
சொன்னவைகளே. தவறான பாதையை நான் எமதுமக்களுக்கு ஒருபோதும் காட்டியதில்லை. என்னைநம்பிக்கையோடுபின் தொடர்ந்தவர்கள் தோற்றுப்போனதில்லை. இதுதான் எனதுவரலாறு.

எதிரணியினர் எழுதி கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தில் தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைகள் குறித்து எதுவும் இல்லை. எமது மக்களின் நியாயமான உரிமைகளுக்குஎ திரானவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கூட செய்திருக்கிறார்கள்.

இதுவரை எடுத்த முயற்சிகளுக்குள் புகுந்து, எமது அரசியல், அபிவிருத்தி நோக்கிய பயணத்தை எதுவும் இல்லாமல் செய்து, இடையில் தடுத்து நிறுத்த நாம் அனுமதிப்பதா?

இதுவரை எமது கோரிக்கைகளை ஏற்று, செயற்படுத்தி வந்தவராகவும், தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வை அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் வழங்கவேண்டும் என்றும் உறுதியோடு இருக்கும் தலைவராகவுமே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை நான் பார்க்கின்றேன். அவரது காலத்திலேயே தீர்வு சாத்தியமாகும்.

ஆகவே,எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களையே ஆதரிக்க முன்வரவேண்டும் என்று தமிழ் பேசும் மக்களை நோக்கிநான் உரிமையோடு கேட்கின்றேன்.

வாய்ப்புகளை பயன்படுத்த மறுத்த தவறானவ ழிமுறைகள் தோற்றுப்போனாலும், எமதுமக்கள் தோற்றுப்போனவர்கள் அல்ல என்பதை உரக்கச் சொல்வோம்!

எமதுமக்கள் இலங்கையர்களாக வாழவேண்டும் என்பதற்காகத் தமிழர்கள் என்ற அடையாளத்தை இழக்கவோ, தமிழர்களாக வாழவேண்டும் என்பதற்காக இலங்கையர்கள் என்ற அடையாளத்தை இழக்கவோ தயாராக இல்லை. எமதுமக்கள் தமிழர்களாகவும்,அதேநேரம் இலங்கையர்களாகவும் வாழவே விரும்புகின்றனர்.


நன்றி! வணக்கம்!!
என்றும் உங்கள் மத்தியில் வாழும்,
டக்ளஸ் தேவானந்தா .பா.உ
செயலாளர் நாயகம்,
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, (ஈ.பி.டி.பி)

No comments:

Post a Comment