Tuesday, December 16, 2014

ஐ.தே.கவின் தேர்தல் இயந்திரத்தின் சுவிட்சை அனைத்து விட்டே சிரிகொத்தாவில் இருந்து வெளியேறினேன் முடியுமானால். அதனை மீண்டும் இயக்கிக் இயக்கிகாடவும் ஐ.தே.க. தலைவர்களுக்கு திஸ்ஸ அத்தநாயக்க சவால்!

Tuesday, December 16, 2014
இலங்கை::ஐ.தே.க.வின். தேர்தல் செயற்பாடுகள் சீர்குலைந்துவிட்டன. இன்று நாட்டில் எங்குமே ஐ.தே.க.வின் அலுவலகங்களும் இல்லை என சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். கம்பளையில் பிரதமர் டி.எம். ஜயரத்ன ஏற்பாடு செய்த கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
 
ஐ.தே.கவின் தேர்தல் இயந்திரத்தின் சுவிட்சை அனைத்து விட்டே சிரிகொத்தாவில் இருந்து வெளியேறியதாகவும், முடியுமானால். அதனை மீண்டும் இயக்கிக் காட்டுமாறு தாம் ஐ.தே.க. தலைவர்களுக்கு சவால் விடுவதாகவும் அமைச்சர் கூறினார்.
மைத்திரிபால சிறிசேன என்பவர் பொருத்தமற்ற ஒருவரென சந்திரிகா பண்டாரநாயக்க கூறியதாக மங்கள சமரவீர என்னிடம் தெரிவித்தார்.
 
ஐ.தே.க. தலைவர்கள் இருட்டில் தட்டுத்தடுமாறி சுவிட்சை கண்டு பிடித்து மீண்டும் செயல்படச் செய்யும் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறையாகவும் நாட்டின் ஜனாதிபதியாகி இருப்பார்.
 
மைத்திரிபால சிறிசேன ஒவ்வொரு கட்சிகளுடன் கைச்சாத்திடும் ஒப்பந்தங்கள் பயங்கரமான நிலைமையை ஏற்படுத்தும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை இயலுமானால் மக்கள் முன் சமர்ப்பிக்குமாறு சவால் விடுகிறேன்.
மைத்திரிபால ஜனாதிபதியாகி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனைகளை நிறைவேற்றினால். ஜனாதிபதி படைவீரர்களுடன் கஷ்டப்பட்டு வெற்றி கொண்ட சுதந்திரம். இல்லாமற் போகும் என்றும் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தொடர்ந்தும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment