Tuesday, December 23, 2014
இலங்கை::அரசில் இருந்து விலகிய அமைச்சர் ரிஷாத் பதியுதீனை கேலி செய்து உருவப் பொம்மை ஒன்று வவுனியா, வைத்தியசாலைச் சுற்றுவட்டத்தில் உள்ள மின்சார கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை::அரசில் இருந்து விலகிய அமைச்சர் ரிஷாத் பதியுதீனை கேலி செய்து உருவப் பொம்மை ஒன்று வவுனியா, வைத்தியசாலைச் சுற்றுவட்டத்தில் உள்ள மின்சார கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளது.
அதில் சுலோக அட்டைகளும் தொங்கவிடப்பட்டுள்ளன. வர்த்தக கைத்தொழில்
அமைச்சராகவும் வன்னி அபிவிருத்திக் குழு தலைவராகவும் இருந்த அகில இலங்கை
மக்கள் காங்கரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று பொது
எதிரணி வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தார். இதனை எதிர்த்தே
உருவப்பொம்மை வைக்கப்பட்டுள்ளது.
அதில் அவர் தமிழ் மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் துரோகம்
இழைத்துவிட்டார் என்றும், அரசுடன் இருக்கும்போது பெருமளவிலான சொத்துக்களை
சேர்த்துள்ளார் என்றும், மைத்திரிபால சிறிசேனவிடம் பணம் வாங்கியே அவருக்கு
ஆதரவு வழங்கியுள்ளார் என்றும் சுலோக அட்டைகள் தொங்க விடப்பட்டிருந்தன.

No comments:
Post a Comment