Friday, December 19, 2014
அமெரிக்க அரசின் வலைதள பணிகளை மேற்கொள்வதற்காக கடந்த 2009ம் ஆண்டு 65 வயதான க்ரோஸ் என்பவர் கியூபா சென்றார். அங்கு உளவு வேலை பார்த்ததாக அவரை கியூபா அரசு சிறைபிடித்தது. இது தொடர்பாக எந்தவிதமான பேச்சுவார்த்தைக்கும் கியூபா அரசு உடன்படவில்லை. இதை தொடர்ந்து அமெரிக்காவில் தெற்கு புளோரிடா மாநிலத்தில் உளவு பார்த்ததாக கியூபாவை சேர்ந்த 5 பேரை அமெரிக்கா சிறைபிடித்தது. கடந்த 5 ஆண்டுகளாக இரு தரப்பிலும் எவ்வித தூதரக உறவும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில் கியூபாவில் பிணை கைதியாக பிடித்து வைக்கப்பட்டு இருந்த க்ரோஸ் நேற்று முன்தினம் காலை விடுவிக்கப்பட்டார். அவர் அமெரிக்க விமானம் மூலம் நேற்று முன்தினம் மாலை வாஷிங்டனுக்கு சென்றார். கியூபாவை சேர்ந்த 5 பேரையும் அமெரிக்கா விடுவித்தது. இதை தொடர் ந்து அந்நாட்டுடன் தூதரக உறவுகளை மேற்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தார்.
வாஷிங்டன்::கியூபாவில் 5 வருடங்களுக்கு முன் சிறை பிடிக்கப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த 65 வயதான க்ரோஸ் நேற்று முன்தினம் காலை விடுவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து கியூபாவுடன் தூதரக உறவு மேற்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.
அமெரிக்க அரசின் வலைதள பணிகளை மேற்கொள்வதற்காக கடந்த 2009ம் ஆண்டு 65 வயதான க்ரோஸ் என்பவர் கியூபா சென்றார். அங்கு உளவு வேலை பார்த்ததாக அவரை கியூபா அரசு சிறைபிடித்தது. இது தொடர்பாக எந்தவிதமான பேச்சுவார்த்தைக்கும் கியூபா அரசு உடன்படவில்லை. இதை தொடர்ந்து அமெரிக்காவில் தெற்கு புளோரிடா மாநிலத்தில் உளவு பார்த்ததாக கியூபாவை சேர்ந்த 5 பேரை அமெரிக்கா சிறைபிடித்தது. கடந்த 5 ஆண்டுகளாக இரு தரப்பிலும் எவ்வித தூதரக உறவும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில் கியூபாவில் பிணை கைதியாக பிடித்து வைக்கப்பட்டு இருந்த க்ரோஸ் நேற்று முன்தினம் காலை விடுவிக்கப்பட்டார். அவர் அமெரிக்க விமானம் மூலம் நேற்று முன்தினம் மாலை வாஷிங்டனுக்கு சென்றார். கியூபாவை சேர்ந்த 5 பேரையும் அமெரிக்கா விடுவித்தது. இதை தொடர் ந்து அந்நாட்டுடன் தூதரக உறவுகளை மேற்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தார்.
கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோ நேற்று முன்தினம் மதியம் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் தொலைபேசியில் பேசினார். தூதரக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் விரைவில் துவங்கும் என்று அமெரிக்க குடியரசு கட்சியை சேர்ந்த செனட்டர் மார்கோ ருபியோ தெரிவித்தார்.

No comments:
Post a Comment