Tuesday, December 23, 2014
இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உட்பட யுத்தத்தில் ஈடுபட்ட படை வீரர்களை யுத்தக் குற்றம் புரிந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்கவுடன் மைத்திரி செய்து கொண்டுள்ள இரகசிய ஒப்பந்தத்தை சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கா நேற்று வெளியிட்டார்.
இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உட்பட யுத்தத்தில் ஈடுபட்ட படை வீரர்களை யுத்தக் குற்றம் புரிந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்கவுடன் மைத்திரி செய்து கொண்டுள்ள இரகசிய ஒப்பந்தத்தை சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கா நேற்று வெளியிட்டார்.
சர்வதேச சக்திகளின் தேவையையும் புலி டயஸ்போராவின் தேவைகளையும் நிறைவேற்றும் வகையில் இந்த இரகசிய ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கா தெரிவித்தார்.
ஸ்ரீல.சு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் இதனை வெளியிட்டார். அமைச்சர் திஸ்ஸவுடன் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிரி ஜயசேக்கர ஆகியோரும் கலந்து கொண்டனர்.
2014 நவம்பர் மாதம் 1ம் திகதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் செய்து கொண்ட உடன்படிக்கை ஐ.தே.க. வின் செயற் குழுவுக்கு தெரியாமலேயே செய்து கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் இரண்டு பிரிவுகளாக உள்ளது. இரண்டாவது பிரிவு 7 ஆவது பந்தியின் 3 வது வரியில் குறிப்பிட்டுள்ளதன்படி பியுத்த குற்றம் மற்றும் மனித உரிமைகள் மீறப் பட்டுள்ளமை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினால் இலங்கைக்கு செய்யப்பட்டுள்ள பரிந்துரைகள் அனைத்தையும் நடைமுறைப்படுத்து வதற்கு சர்வதேசத்துக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குதல்பூ என குறிப் பிடப்பட்டுள்ளது.
இதனூடாக ஜனாதிபதியும் படை வீரர்களையும் நீதிமன்றத்தின் முன் நிறுத்த இணக்கம் தெரிவித்துள்ளனர். நாடு சுதந்திரம் அடைய வேண்டுமென்றும் மக்களுக்கு சுதந்திரமான நிம்மதியான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதற்காக உயிர்த்தியாகம் செய்த படையினரை காட்டிக் கொடுப்பதற்கு ஒப்பந்தம் செய்துள்ளனர் என்றும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
அத்துடன் வடபகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரின் 50 வீதமானோரை அப்புறப்படுத்துவது என்றும், பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டை 40 வீதம் குறைப்பது என்றும் 13 வது திருத்தச் சட்டத்துக்கும் அப்பால் சென்று அதிகாரங்களை வழங்குவது என்றும், வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட்டு உரியவர்களுக்கு காணிகள் ஒப் படைக்கப்பட்டு விடும் என்றும் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரையின் பிரகாரம் இலங்கைக்குள் நிபுணர்கள் குழு வருகை தந்து யுத்தக் குற்றம் தொடர்பாக விசாரணைகள் நடத்துவதாகும். இதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்பதே அரசின் நிலைப்பாடு எனினும் மைத்திரி செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் பிரகாரம் இதற்கு வழிவகை செய்து விடும் என அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவும், வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் தெரிவித்தனர்.


No comments:
Post a Comment