Tuesday, December 23, 2014
வாஷிங்டன்::ராணுவத்தில் பல புதிய தொழில்நுட்ப வசதிகளைக் கண்டுபிடித்து வரும் அமெரிக்க ராணுவம் தற்போது புத்திசாலி புல்லட் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இலக்கை நோக்கி சுட்ட பிறகு காற்றில் பயணிக்கும் நிலையிலேயே புல்லட்டின் திசையை மாற்ற முடியும் என்பதே இதன் சிறப்பம்சம் ஆகும்.அந்நாட்டுப் பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சி பணித்திட்டங்கள் முகமை, எக்சாக்டோ என்ற திட்டத்தின்படி ஏற்கனவே நேரடியான துப்பாக்கி சுடும் சோதனைகளை நடத்தியுள்ளது. இது போர்வீரர்களுக்கு இலக்கு நகரும் போதும் அதை தாக்கும் உதவியை செய்ய வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டமாகும்.
கடும் காற்று மற்றும் புழுதிக் காற்று வீசும் போது தற்போது உள்ள புல்லட்கள் மூலம் இலக்கை நோக்கி குறி வைத்து தாக்க போர்வீரர்களுக்கு சிரமம் ஏற்படுவதாக பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சி பணித்திட்டங்கள் முகமை தெரிவித்தது. 50 கேலி
பர் கொண்ட இந்த புத்திசாலி புல்லட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புல்லட் மூலம் புழுதிக்காற்று வீசும் போது கூட வீரர்களால் துல்லியமாக இலக்கை நோக்கி சுடமுடியும். இதற்கான சோதனை முயற்சியில் புல்லட்டானது 1.5 மைல் தூரத்திற்கு நிகரான இலக்கை மூன்றே விநாடிகளில் துல்லியமாக சென்று தாக்கியது.
துப்பாக்கியிலிருந்து புல்லட் செலுத்தப்பட்டவுடன், அதில் இணைக்கப்பட்டுள்ள ஸ்நைபரானது இலக்கை நோக்கி லேசர் வெளிச்சத்தை பாய்ச்சும். இலக்கு நகரும்போது லேசரும் அதன் கூடவே நகரும். இந்த நேரத்தில் காற்றில் பாய்ந்து சென்று கொண்டிருக்கும் புல்லட்டில் இருக்கும் ஆப்டிகல் சென்சாரானது லேசர் வெளிச்சம் ஏங்கே செல்கிறது என்பதை கண்டறிந்து அதற்கேற்றவாறு தனது பாதையை மாற்றி இலக்கை தாக்குகிறது. இந்த புதிய முறையால் இலக்கு தவறாமல் சுட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன



No comments:
Post a Comment