Pages

Wednesday, December 24, 2014

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் இடம்பெற்ற கைகலப்பு தொடர்பினில் விசாரணைகளை மேற்கொள்ள தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களிற்கு காவல்துறை அழைப்பு!

Wednesday, December 24, 2014
இலங்கை::
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் இடம்பெற்ற கைகலப்பு தொடர்பினில் விசாரணைகளை மேற்கொள்ள தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களிற்கு காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது. கூட்டமைப்பு சார்பு வடமாகாணசபை உறுப்பினர்கள் கே.சிவாஜிலிங்கம் மற்றும் கஜதீபன் ஆகியோருடன் காரைநகர் பிரதேச சபை தலைவர் ஆனைமுகன் ஆகியோருக்கே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை யாழ்.காவல்நிலையத்திற்கு தம்மை சமூகமளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.குறித்த கைகலப்பு சம்பவம் தொடர்பினில் ஈபிடிபியினர் செய்த முறைப்பாடுகளை அடுத்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த கைகலப்பினில் தமது உறுப்பினர்கள் காயமடைந்திருந்ததாக ஈபிடிபி அறிவித்திருந்ததுடன் வடமராட்சி இணைப்பாளர் சிறீரங்கேஸ்வரன் கை முறிந்திருந்ததாகவும்
தெரியப்படுத்தியிருந்தது. அத்துடன் கைகலப்பினை கண்டித்து யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பதாக ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment