Thursday, December 11, 2014

ஏழுமலையானை தரிசித்தால் நல்லது நடக்கும் என்பது எனது நம்பிக்கை: இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே!

Thursday, December 11, 2014
சென்னை::இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே நேற்று குடும்பத்தினருடன் திருப்பதி வந்து ஏழுமலையானை தரிசனம் செய்தார். இதற்காக முதல் நாளே திருமலை வந்த அவர் அங்குள்ள கிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் தங்கினார். நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் சுப்ரபாத சேவையில் அவர் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் சார்பில் தீர்த்த பிரசாதம், லட்டு பிரசாதம் மற்றும் ஏழு மலையானின் வஸ்தரம், உருவப்படம் ஆகியவை வழங்கப்பட்டது.
 
முன்னதாக ராஜபக்சேவை கோவில் அதிகாரிகள் மகாவாயில் வழியாக அழைத்து வந்தனர். அதனை தவிர்த்த ராஜபக்சே சாதாரண பக்தர்கள் செல்லும் வரிசை வழியாக சென்று ஏழு மலையானை தரிசித்தார்.
 
தரிசனம் முடிந்ததும் திருமலை தேவஸ்தானத்தின் டி.வி.க்கு அவர் பேட்டி அளித்தார். ராஜபக்சே கூறியதாவது:–
 
ஏழுலையானை தரிசிக்கும் போது மனதில் அமைதி நிலவுகிறது. இந்த மன அமைதியும், சந்தோஷமும் கிடைப்பது அபூர்வமாகும். ஏழுமலையானை தரிசித்தால் நல்லது நடக்கும் என்பது எனது நம்பிக்கை. அதுபோல் நல்லது நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இலங்கையில் தமிழர்கள் நிலை எப்படி உள்ளது என்று நிருபர்கள் கேட்டபோது, அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களர்கள் அனைவரையும் நாங்கள் சமமாக கருதுகிறோம் என்று பதில் அளித்தார்.
 

No comments:

Post a Comment