Thursday, December 11, 2014
இலங்கை::இலங்கை கடற்படையினரால் நேற்று சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 43 பேரை வரும் 22 தேதி வரை சிறையில் அடைக்க அந்நாட்டு ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை::இலங்கை கடற்படையினரால் நேற்று சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 43 பேரை வரும் 22 தேதி வரை சிறையில் அடைக்க அந்நாட்டு ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காரைக்கால் பகுதியை சேர்ந்த 29 மீனவர்கள் மற்றும் நாகை மாவட்டத்தை சேர்ந்த 14 மீனவர்கள் நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் நேற்று மாலை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவரிடம் விசாரணை நடததப்பட்டு வந்தது.
விசாரணை முடிந்த நிலையில் இன்று மீனவர்கள் அனைவரும், ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஊர்க்காவல்துறை நீதிமன்ற நீதிபதி, மீனவர்களை இம்மாதம் 22ஆம் தேதி வரை சிறையில் வைக்க உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment