Wednesday, October 15, 2014
ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளுக்கு இலங்கை மீன் வகைகள் பிரவேசிப்பதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றிய மீன்பிடி மற்றும் கடற்றொழில் விவகார ஆணையாளர் மாரியா தமனாகாய் தெரிவித்துள்ளார்.
இன்னும் மூன்று மாத காலங்களின் பின்னர் இலங்கையிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மீன் வகைகளை ஏற்றுமதி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
2012ம் ஆண்டு நவம்பர் மாதம் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு எச்சரிக்கை கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்ததாகவும் எச்சரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் எவ்வித முன்னேற்றமும் தென்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பிலான சர்வதேச சட்டங்களை இலங்கை மீனவர்கள் பின்பற்றுவதில்லை. இலங்கையிலிருந்து வருடாந்தம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 74 மில்லியன் யூரோ பெறுமதியான மீன் வகைகள் ஏற்றுமதி செய்கிறது.
தமது தட்டில் இருக்கும் உணவு எவ்வாறு கிடைக்கப்பெறுகின்றது என்பதனை அறிந்து கொள்ள சகல ஐரோப்பிய பிரஜைகளுக்கும் உரிமை இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment