Wednesday, October 15, 2014

காங்கேசன்துறை வெளிச்சவீட்டினை பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோட்டாபய ராஜபக்ச திறந்து வைப்பு!

Wednesday, October 15, 2014
காங்கேசன்துறை வெளிச்சவீட்டினை பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோட்டாபய ராஜபக்ச திறந்து வைத்தார்.
 
யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியின் அழைப்பை ஏற்று இருநாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ச வரலாற்று முக்கியம் வாய்ந்த காங்கேசன்துறை வெளிச்ச வீட்டினை நேற்று திறந்து வைத்தார்.
 
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட செயலர் பளையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவை ஆரம்ப வைபவத்தில் கலந்து கொண்டதுடன் மேலும் பல நிகழ்வுகளிலும் கலந்து கொண்டிருந்தார்.

மேலும், கடந்த கால யுத்தத்தினால் குறித்த வெளிச்சவீடு சேதமுற்ற நிலையில் இருந்தது. எனவே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்பதாலும் எதிர்கால சந்ததிக்கும் நாம் அடையாளப்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் இராணுவத்தினரால் குறித்த வெளிச்சவீடு புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டதாகவும்

குறித்த வெளிச்ச வீடானது இலங்கை தொல்பொருள் துறையினரின் மேற்பார்வையின் கீழ் கட்டப்பட்டது என்றும் இராணுவ ஊடகப்பிரிவு தங்கள் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திதாக மீள் நிர்மானம் செய்யப்பட்ட காங்கேசன்துரை களங்கரை விளக்கத்தை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ அவர்கள் யாழ்பாண பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேராவின் அழைப்பின் பேரில் திறந்து வைக்கும் நிகழ்வு (ஒக்டோபர் 12ஆம் திகதி இடம் பெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி செயலாளர் திரு. லலித் வீரதுங்கவும் கலந்து கொண்டார்

22 மீட்டர் உயரமுடைய இந்த களங்கரை விளக்கம் 1892 ஆம் ஆண்டு நிர்மானிக்கப்பட்டதாகும் வலுவூட்டப்பட்ட சுற்றுச் சுவர்களுடன் நிர்மானிக்கப்பட்ட இது வட சமுத்திரத்தை முன் நோக்கியதாக காணப்படுவதுடன் முற்பட்ட காலங்களில் ஏற்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளினால் பாரிய சேதத்திற்குள்ளானது.

யாழ்பாண பாதுகாப்புப் படைத் தளபதியின் வழிகாட்டலின் கீழ் இலங்கை இராணுவத்தின் 5வது பொறியியல் படைப்பிரிவினால் தற்பொழுது இது பழைய தோற்றத்துடன் மீள் நிர்மானம் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இந்நிகழ்வில் கலந்து கொண்ட பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் உதய பெரேரா மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுடன் யாழ் குடாவிலுள்ள 52ஆம் படைப்பிரிவு, 523 படைத் தலைமையகம், 11வது விஜயபாகு காலாட்படை பிரிவு, மற்றும் 23வது கெமுனு வொட்ச் போன்றன உள்ளடங்கலாக பல இராணுவ முகாமகளுக்கு விஜயம் செய்தார் அத்துடன் வரலாற்று சிறப்பு மிக்க சிதைந்து காணப்படுகின்ற யாழ் கச்சேரியையும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment